யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு |
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வரணி கரம்பன் இடைக்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றும் 43 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் என்பவரே மேற்படி படுகொலை செய்யப்பட்டவராவார். யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்து, தோள், கை, பிடரி ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டப்பபட்டும் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுகின்றது. இக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. கொலை செய்யப்பட்ட நபர் மீசாலையில் வசித்து வருகின்றார். கந்தர்மடத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருந்துள்ளதாகவும் அதன்படி நேற்று குறித்த வீட்டிற்கு வந்த அவர் இரவு 8.00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் கதைத்ததாகவும் சில மணி நேரத்தின் பின்னர் குடும்பத்தினரால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட போது தொலைபேசி மணி ஒலித்தும் அவர் பதிலளிக்காமையால் குறித்த வீட்டிற்கு உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர் எனவும் அதன்போது அவர் சடலமாக கிடப்பதைக் கண்டனர். பின்னர் அவரது உறவினர்கள் யாழ். காவற்றுறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தைப் பார்வையிட்ட யாழ். மாவட்ட நீதவான் உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கொலை தொடர்பில் யாழ். காவற்றுறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 11 November 2011
யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment