பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு ExCeL`ல் இல்லை.
எதிர்வரும் 27.11.2011 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்ந தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம் மாற்றப்பட்டுள்ளது.
தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் 25.08.2011 முதல் ExCeL மண்டபத்தை முற்பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பணிகளும் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட சிலரால் ExCeL மண்டபத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தம்மீது செலுத்தப்பட்ட அதிக அழுத்தங்கள் காரணமாக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைத்து ExCeL நிர்வாகத்தினால் மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
ExCeL மண்டபம் முன்பதிவு செய்து தகவல் வெளியிட்ட பின்னர் ExCeL மண்டபம் தொடர்பான பல சர்ச்சைகளை சில ஊடகங்கள் வெளியிட்டன. அதேபோன்று தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு ExCeL மண்டபத்தில் நடைபெறவுள்ளது தொடர்பாக பல்வேறு சவால்கள் எமது தமிழினத்துக்குள் இருந்தும் விடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை வழமை போன்று ExCeL மண்டபத்தில் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மண்டபம் நிறுத்தப்பட்டுள்ளது.
எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே! மாவீரர்களுக்கு உரித்துடையோரே மிகுந்த சவால்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் இவ் ExCeL மண்டபத்தினை ஏற்பாடுசெய்து மாவீர தெய்வங்களுக்கு வணக்க நிகழ்வு செவ்வனே நடைபெற நாம் செய்த சகல முயற்சிகளும் தாங்கள் அறிந்ததே. தாம் செய்யும் செயலின் விளைவுகளை சரிவர உணராத சிலரினால் மேற்கொள்ளப்பட்ட மோசமான நடவடிக்கைகளினால் நாம் இம் மண்டபத்தினை இழக்க நேரிட்டது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக எமது உணர்வுகளை யாரும் அழத்துவிட முடியாது.
எமது போராட்ட வரலாற்றில் பல துரோகச் சம்பவங்களை நாம் சந்தித்துள்ளோம். அவற்றையெல்லாம் எந்த மனவுறுதியுடன் கடந்து வீறுநடை செய்தோமோ அதே மன உறுதியுடன் இச்சம்பவத்தினையும் நாம் கடந்துசெல்ல உறுதி பூண்டுள்ளோம். எமது மாவீரச்செல்வங்களின் ஆசியும் உண்மையின் வழிநடத்தலும் உறுதுணையாக உள்ளது. மண்டபம் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர மாவீரர் தினம் நிறுத்தப்படவில்லை.
எனவே புதிய பொலிவுடன் எழுச்சியோடு சிறந்த முறையில் எமது தேசிய விழுமியங்களுக்கேற்ப மாவீரர்களுக்கான நிகழ்வு பிறிதொரு இடத்தில் ஏற்பாடாகிவருகிறது. உரிய ஏற்பாடுகள் முடிந்தவுடன் ஓரிரு தினங்களில் நிகழ்வு நடைபெறும் இடம் தங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
எனவே எமது அன்பு உறவுகளே! எவ்வாறு ஒரே இடத்தில் ஒருமித்து எமது மாவீர தெய்வங்களை வணங்குவதற்கு உறுதி கொண்டுள்ளீர்களோ அதே மன தெளிவுடன் மாவீரர் வணக்க நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தமிழத் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை ஆவணரீதியாக மக்களாகிய உங்களுக்கு நடந்த சம்பவங்களை தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். இருந்தும் ExCeL மண்டபத்தின்மீது எம்மால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதினால் எவ்வகையான ஆவணங்களை வெளியிட முடியும் என்பது தொடர்பாக சட்ட ஆலேசனைக்காக காத்திருக்கிறோம். எமக்கான சட்ட அனுமதி கிடைத்தவுடன் நிச்சயமாக எம்மால் இறுதிவரை ExCeL மண்டபத்துடன் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களும் மக்களாகிய உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
சூழலைப் புரிந்துகொண்டு ExCeL மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்த ஊடக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைக் கூறிக்கொள்வதோடு தொடர்ந்தும் தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தி முடிக்கும்வரை உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தந்துதவுமாறு அன்போடும் பணிவோடும் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழத் தேசிய நினைவேந்தல் அகவம்
ஐக்கிய இராட்சியம்

No comments:
Post a Comment