கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!
இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ, தொழி்ல் நிறுவனங்களுக்கோ மின்சாரம் எப்போது வரும் - எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இதே நிலைதான் அத்தியாவசிய தேவைகளான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்.
ஆனால் நோக்கியா, ஹூன்டாய், போர்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை மிகக்குறைந்த சலுகை விலையில் வழங்கி தன் இறையாண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
இந்நிலையில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு பாராட்டும், ஆதரவும் அளிக்கும் விதத்தில் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் இறையாண்மை மிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதோ ஆதாரம்...
இணையத் தொடுப்பு: http://pib.nic.in/
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலை (பூங்காக்)கள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை (பூங்கா) அமைக்கப்படுகிறது.
இந்திய அரசின் வழக்கப்படி, இந்தியர்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் இலங்கைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்பட்டது போலும்.
வாழ்க இந்தியா!
வளர்க ஜனநாயகம்!!
No comments:
Post a Comment