பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன TCC 21 வருடங்கள் ஆனது எப்படி
பிரித்தானியாவைப் பொறுத்த வரையில் வழமையாக நடைபெறும் எக்ஸ்செல் மண்டபத்தில் தான் இம்முறையும் தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தின் வழமையான செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. அங்கேதான் ஒன்றுபட்ட தமிழராக இணைந்து நிற்க வேண்டும் என்று கருத்துரைத்த அனைவரும் அணிதிரள வேண்டும் என்பது தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த நினைக்கும் அனைவரதும் ஒன்றிணைந்த கருத்தாகும். நினைவேந்தல் அகவமானது 2007 இல், இருந்து திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு அன்றில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வெரு வருடமும் அதன் வழமையான நடைமுறைகள் இருந்து விலகாமல் சிறப்பான முறையில் தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வினை நடத்தி வந்துள்ளமையும் அனைவரும் அறிந்த விடையம். திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், அம்மா அவர்கள் தமிழீழ விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை மாவீரர்களாக எம்மண்ணில் விதையாக்கியவர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகிறது.
எமக்காக மரணித்த மறத்தமிழ் மாவீரர்களுக்கு நாம் வழங்கப்போகும் காணிக்கை இந்தப் பிளவுகள் தானா?? மாவீரர்கள் தமது உயிரிலும் மேலாக எங்கள் தலைவரையும், அவர் நேசித்த மக்களையும், தமிழீழம் என்ற எம் தேசத்தையும் நேசித்தார்களே தவிர, மாவீரர் நாள் நிகழ்வுகளை அல்ல. மாவீரர் நாள் என்பது தாயகமண் மீட்புப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய புனிதர்களை வணங்கி அவர்களின் ஆத்ம பலத்துடன் அவர்கள் காட்டிய வழியில் சென்று எமக்கான விடுதலையை வென்று எடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு வீரமும் தியாகமும் நிறைந்த நாளாக தேசத்தின் புதல்வர்களுக்காக தேசியத் தலைவரினால் தமிழர் வரலாற்றில் பொறிக்கப்பட்ட புனிதமான நாள் தான் இந்த மாபெரும் மாவீரர் நாள். இந்த மாவீரர்களின் பெற்றோர்களுக்கு யார் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? புலம்பெயர் தேசத்தைப் பொறுத்த வரையில் இங்கு நாம் தான் எல்லாம் எமக்கு கீழ் நாம் சொல்வதின்படிதான் யாராக இருந்தாலும் செயற்பட வேண்டும் என்று திமிராக நாகரீகமற்ற வகையில் மிகவும் கேவலமான வசனங்கள் பேசியவர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வை பிளவுபடுத்தியதை நாம் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா?
இந்த நிகழ்வின் நிதிசேகரிப்பும் அதனைக் கையாண்டவர்களும் தான் இந்த கமல் தனம் குழுவினர். (தற்போது ஆறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த திட்டமிட்டவர்களும் இந்த கமல் குழுவினர் தான்.)
காலம் காலமாக இந்த நிகழ்வுக்கான மண்டப ஒழுங்குகளைச் செய்தவர்கள், திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், அவர்களின் தலைமையில் திரு.ஸ்கந்ததேவ, திரு,சுகந்தகுமார் தலைமையிலான செயற்பாட்டாளர்கழுடன் இணைந்து இன்னும் சில பெயர் குறிப்பிட விரும்பாத மிக நீண்டகால செயர்ப்பாட்டலர்களும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மாவீரர் நாள் நிகழ்வின் செயற்பாடுகள் இப்படி பலரிடம் பலவகையான பொறுப்புக்கள் சார்ந்து இருக்கும் போது, காசுக்கணக்கு பார்த்து அதைக் கையாண்டு அதில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திய ஒரு சில செயற்பாட்டாளர்கள், தாங்கள் தான் 21 ஒரு வருடமாக மாவீரர்நாள் நிகழ்வுகளைச் செய்தோம் என்று மாரடிப்பதை எப்படி ஏற்க முடியும். இதற்கு புத்திகெட்ட சில இணையங்களின் ஊடக(அ)வியலாளர்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக்கொள்ளும் சிந்திக்கத் தெரியாத கழிமண் தலைகள் சில ஆமாம் போடுகிறார்கள். தேசத்தையும் மாவீரர்களையும் நெஞ்சில் சுமந்து, சுயமாக சிந்தித்து சுயமாக முடிவெடுக்கும் எந்த ஒரு நல்ல மனிதரும் இப்படிப்பட்ட பொய்யான வாதங்களைச் சொல்லவும் மாட்டான், அப்படிச் சொல்பவர்களை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்.
தமிழ் தேசிய நினைவேந்தல் அகவமானது பிரித்தானியாவில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயரினைப்பாவித்து. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து துரத்தப்பட்ட ரூட்ரவி, என்பவருடன் இணைந்து மகேஷ், தனம்,கமல், போன்ற பெயர்களை உடைய நபர்கள் தாங்கள் முன்னாள் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற முகமூடியை போர்த்திக்கொண்டு போலியான பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் செய்கின்றனர்.
இங்கே கமல் தனம் போன்றவர்கள் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராடத்தை பொய்யான தகவல்களைச் சொல்லி முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக திரு.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களினால் கண்டிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இவர்களுடன் இணைந்து நிற்கும் இளையோர்களுக்கும் நன்கு தெரியும். இவர்களின் செயற்பாடுகளில் குழப்பங்கள் அடைந்திருந்த இளையோர்கள் சிலரும் இவர்களுடன் இணைந்தி நிற்பதன் காரணமும் புரியவில்லை.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த இளையோர்களின் செயற்பாடுகள் தற்போது கமல் குழுவினரால் முடக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடையம்.
மகேஷ் என்பவர் 2009 ஆரம்ப காலத்தில் ஸ்ரீலங்கா இரகசிய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் தான் சிறிலங்காவின் இரகசிய புலனாய்வுத் துறையின் சித்திரவதையுடன் கூடிய தடுப்பு முகாமில் இருந்து நேரடியாக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டவர் இவர்தான் தற்பொழுது அனைத்துலக செயலகத்தின் செயற்பாட்டாளர்களுக்கும், செயற் பாடுகளுக்கும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், இவர் அடிப்படையில் ஒரு போராளியாகாக் கூட இருக்கவில்லை. தன்னைத் தலைவர்தான் வேறு சில வேலைகளைத் தந்து இங்கு அனுப்பி வைத்ததாக கூறிவருகிறார்.
புலம்பெயர் தேசத்தில் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் 2009 இற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை சந்திப்பதற்காக வன்னிக்கு வந்திருந்வேளை தலைவர் அவர்கள் இந்த நபரைச் சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார் என்பதும் பெரும்பாலான போராளிகளுக்கு தெரியும். புலம்பெயர் தேசத்தில் இருக்கும் இவர்போன்ற மற்றவர்களுக்கு இந்த விடையங்கள் தெரிய வாய்ப்பில்லை தற்போது இவர் போர்த்தியிருக்கும் முகமூடி விரைவில் கிழித்தெறியப்படும் அப்போது இந்த நபரைத் தமது தலைவர்களில் ஒருவராக தலையில் துக்கிவைத்து ஆடிய பணம்தின்னும் மனித உருவங்கள் தாமாகவே தொலைந்து போவார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழர்களைப் பொறுத்தமட்டில் எமக்கு எதிரியானவன் சிங்கள பௌத்த பேரினவாதமே. எங்களில் சில பணத்தாசையும், நிலத்தாசையும், பெண் ஆசையும், பொன் ஆசையும் பிடித்த சீர்கெட்ட சுயநலவாதம் கொண்ட மனிதர்களின் எண்ணங்களும் செயற்பாடுகளும், ஒன்றிணையத் துடிக்கும் தமிழர்களைக் குழப்பி, பல பிரிவுகளாக்கி பிரதேசவாதமும், குழு நிலைவாதமும், பேசவைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தை திசைதிருப்பி விடுவதும். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி செயற்பாட்டுக் குழுவில் ஒரு சிலர் தமது சுய நலன்களுக்காகவும் தமது உறவினர்கள் தொடர்ந்தும் பொறுப்பு நிலையில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஒன்றிணைந்து செயற்பட மறுக்கின்றனர். வேறுசிலர் தமிழீழத்திற்கு சொந்தமான சொத்துக்களை தம்வசப்படுத்தவும் அந்த சொத்துக்களை பங்குபோட்டுக் கொள்ளவும் பிளவுபட்டு நிற்கின்றனர். ஆக மொத்தத்தில் இதுவரை காலமும் தேசியம் பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு என்று கூறி நிதி சேகரித்த இவர்கள் இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர்களின் கைகளில் இருந்த தேசிய சொத்துக்கள் அனைத்தையும் தம்வசப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
சொத்துக்களைப் பிரிப்பதுபோல் மாவீரர்களையே கொச்சைப்படுத்தி அந்தப் புனிதர்களின் வணக்க நிகழ்வையே பிளவுபடுத்தியவர்கள் தமக்கு ஏற்றவாறு அதற்குக் கூறும் காரணங்கள் வேடிக்கையானதும், கேவலமானதும், இந்த செயற்பாட்டாளர்களையே வெட்கித் தலைகுனிய வைப்பதுமாக உள்ளது. மக்களின் வசதி கருதி சிறு சிறு மண்டபங்களில் நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்களாம் இந்த சுயநல வாதிகள். இவர்களுக்கு இப்பொழுது தான் மக்களின் தேவை என்னவென்று புரிகிறதா? வீடு வீடாகச் சென்று பணம் தராவிட்டால் நாட்டுக்குப் போக முடியாது என்று பொய்யான தகவல்களைச் சொல்லி பணம் பறிக்கும் போது இந்த நாதாரிகளுக்கு மக்களின் நிலைமை புரியவில்லையா? பறித்த பணத்தை தமது வங்கிகளை போட்டுவைத்துவிட்டு யாரும் பணம் தரவில்லை என்று சொன்னதும், அவசரகால நிதி சேகரிக்க சேகரிக்க வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு புத்தகங்கள் மூலம் பணத்தை சேகரித்து விட்டு அந்தப் பணத்தையும் தமக்கு சொந்தமாக மாற்றிவிட்டு பற்றுச்சீட்டு புத்தகங்கள் தொலைந்துவிட்டதாகக் கூறி செயற்பாடுகளில் இருந்து ஒதிங்கி இருந்தவர்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் மறுபடியும் முகம்காட்ட ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் மக்களை பலவகையாக பிளவுபடுத்தி அவர்களின் தேசிய விடுதலை நோக்கிய போராட்டங்களை மழுங்கடித்து விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை இல்லாது ஒழித்து. போராளிகள் என்று இருப்பவர்களை இல்லாது ஒழித்து. புலம்பெயர் தேசத்தில் ஒரு பலமான கட்டமைப்பு இருப்பதை விரும்பாத இந்த சிறுகூட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்தி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
ஒன்றாக நிற்க வேண்டும் ஒன்றாகா நின்றால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று வாதிட்டவர்கள் இன்று ஆறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தி சிங்கள இனவெறியர்களின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கத் துணிந்துவிட்டனர் 21 வருடமாக மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்தவர்கள் என்று மார்தட்டும் கூலிக்கு மாரடித்தவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த (T.C.C) குழுவினால் 21.வருடமாக பிரித்தானியாவில் எப்படி மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியிருக்க முடியும்? ஆறு இடங்களில் பிளவுபடுத்தப்பட்டுள்ள இந்தவருட மாவீரர்நாள் நிகழ்வுகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்கிற சிறு கூட்டமே தலைமை ஏற்று நடத்துகின்றது என்பது வெளிப்படை. மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பி பல பிரிவுகளாக்கி மாவீரர்களை வியாபாரப் பொருளாக்கிய இந்த வியாபாரிகளை மக்களாகிய நீங்கள் இனம்கண்டு கொள்ளுங்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தமிழர்களைப் பிளவுபடுத்தி இனவெறிச் சிங்களவனின் சிந்தனைகளை புலம்பெயர் தேசத்தில் சிறைவேற்றத் துடிக்கும் இந்த குள்ள நரிகளை மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்??
மக்களாகவே முடிவுகளை எடுங்கள்!
தலைவரின் வழியில் நின்று மாவீரர் நாளில் அவர்களின் நினைவுகளைச் சுமந்து ஒன்றுபட்டு ஒரே இடத்தில் நிற்கப்போகிறோமா???
தலைவர் காட்டிய வழியில் இருந்து தவறி மாவீரர் நாளில் பிளவுபட்டு நின்று நாற்பது ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களையும் கால்களில் போட்டு மிதிக்கப்போகிரோமா? முடிவு உங்கள் கைகளில்!
-உண்மைகள் தெரிந்த மக்களில் ஒருவன்
No comments:
Post a Comment