இலங்கையில் போர்குற்றம் நடந்தது, இன அழிப்பு நடந்தது, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்யப்பட்டர்கள் ஆனால் இவற்றை விட உயிருடன் உள்ளபோதே உடல் உறுப்புக்களை களவாடி எடுத்து அதனை விற்கும் கும்பலும் இங்கும் உள்ளது. இவர்கள் பிடியில் இருந்து அதிஷ்டவசமாகத் தப்பி வந்த பெண் இலங்கைப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ய முன்னர் ஆசிய மனித உரிமைச் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார் என்றால் பாருங்களேன்.
திருமதி காந்தி என்னும் தம்புள்ளையச் சேர்ந்த பெண் ஒருவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அடிக்கடி கண்டி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரை அணுகிய 2வர் தாம் வைத்தியர் என்று தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். அத்தோடு கான்சரைக் குணப்படுத்த இந்தியா செல்வது நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர்.
38 வயதாகும் குறித்தபெண் இதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் ஒருநாள் அவரை மயக்கி பலவந்தமாக இவ்விருவரும் கடத்திச்சென்று ஓர் இடத்தில் அடைத்துள்ளனர். அங்கே தன்னைப் போல பல பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததை அவர் பார்த்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாது உடலில் உள்ள சிறுநீரகம் மற்றும் தேவையான உறுப்புகளை அவர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற அங்கே தனியான அறைகள் இருந்ததையும் அவர் கண்டு ஆடிப்போயுள்ளார்.
குறித்த இப் பெண்ணின் எந்த உறுப்புகளை தாம் அகற்றுவது என்பது தொடர்பாக இக் கும்பல் இவர் மீது பல பரிசோதனைகளை நடத்தியுள்ளது. தான் இந்தியாவில் இருக்கிறேனா இல்லை இலங்கையில் இருக்கிறேனா என்று தெரியாத நிலை இப் பெண்ணுக்கு இருந்திருக்கிறது. பின்னர் சிங்களம் பேசும் தாதிமாரைப் பார்த்ததும் தான் இவர் இலங்கையில் இருப்பதை இவர் உணர்ந்துள்ளார்.
நவம்பர் மாதம் 1ம் திகதி இப் பெண் சிறுநீர் கழிக்கும் அறைக்குச் சென்றவேளை அங்கே வெலைசெய்த பெண் ஒருவரோடும் பேசியுள்ளார். அவரின் உதவியோடு சிறுநீர் கழிக்கும் அறைக்குப் பின்னால் உள்ள ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் ஓடிச்சென்று ஒரு ரயில்வே நிலையத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் பிறிதொரு இடத்துக்குச் சென்றுள்ளார்.
அவர் தற்போது கொடுத்திருக்கும் வாக்குமூலத்துக்கு அமைவாக இலங்கையில் இயங்கிவரும் இக் கும்பல் நோயாளிகளைக் குறிவைத்து அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளை அகற்றி அதனை வெளிநாடுகளுக்கு விற்றுவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். ஈரல் சிறுநீரகங்கள் மற்றும் ஏனைய உடல் உறுப்புகளை இவர்கள் அகற்றி விற்பனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுகிறது. இச்செயலை ஆசிய மனித உரிமை மையம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
அத்தோடு இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டவேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மனித உறுப்புகள் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.
அது விமான நிலையம் ஊடகத்தான் செல்லவேண்டும். அதுவும் குளிரூடப்பட்ட நிலையில் தான் செல்லவேண்டும். இப்படி இருக்கும்போது இக் கும்பல் அரசாங்கத்தின் துணை இன்றி எவ்வாறு செயல்படமுடியும் என்பது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது என்கிறார் கொழும்பு நிருபர்.
அதிர்வு

No comments:
Post a Comment