Translate

Friday, 11 November 2011

ஜெயலலிதா தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது: சீமான்


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.



பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்,

’’சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.

கொலைக்கு தண்டனை கொலையாகாது. 21 ஆண்டுகள் நீண்ட ஆயுள் தண்டனை அனுபவித்து உள்ளனர். அவர்களுக்கு 2 தண்டனை கொடுக்க கூடாது.

29-ந்தேதி கோர்ட்டில் நடக்கும் வழக்கில் அவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைந்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’என்று கூறினார்.

No comments:

Post a Comment