மோசடியில் ஈடுபட்ட இரண்டு பிரித்தானிய வீசா விண்ணப்பதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா வீசா பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலியான ஆவணங்களை வழங்கிய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குடும்ப மற்றும் தங்கிவாழ்வோர் அடிப்படையில் வீசா கோரிய நபர்களே இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.
குறித்த இரண்டு வீசா விண்ணப்பதாரிகளும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மோசடியில் ஈடுபட்டமைக்காக தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.
பிரித்தானிய குடிவரவு சட்டங்களில் எந்தவிதமான தளர்வுகளும் காட்டப்பட மாட்டாது என அந்நாட்டு எல்லை முகவர் நிறுவனத்தின் உயரதிகாரி க்ளேரி முரே தெரிவித்துள்ளார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என அறிவுரை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இவ்வாறு போலி ஆவணங்களை சமர்ப்பித்த இருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
No comments:
Post a Comment