Translate

Friday 11 November 2011

தீர்வை இறக்குமதி செய்ய முடியாது-ஜனாதிபதி.


எமது நாடுகள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் விவகாரங்களுக்கு இறக்குமதி  செய்யப்படும் தீர்வு நிலைத்து நிற்காது எனவும் உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே நீடித்து  நிற்கும் எனவும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது உச்சிமாநாடு மாலைதீவின் அட்டு நகரில் வியாழக்கிழமை(10.11.2011) பிற்பகல் ஆரம்பமானது.
இதன்போது அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
அபிவிருத்திக்கான அணுகுமுறைகளை சார்க் நாடுகள் பொதுவான விதத்தில் கொண்டுள்ளமை முக்கியமானவிடயம் என்றும், அதனாலேயே அபிவிருத்தியை வெறுமனே பணம் அல்லது பணத்தின் பெறுமதியின் அடிப்படையில் கொண்டிருப்பதற்கு தாம் உறுதியாக நிராகரித்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்கான முழுமையான அளவுகோலாக  மக்களே காணப்படுவதாகவும், ஆழமாக வேரூன்றப்பட்டிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகள் நமது வாழ்வின் அத்தியாவசிய அங்கங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பின்தங்கிய பகுதிகளில்  அடிப்படை வசதிகள் இன்றி நீண்டகாலமாக நீண்ட காலமாக இயங்கிவரும் பாடசாலைகளை தரமுயர்த்தும் விடயத்திற்கு சார்க்  நாடுகள் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறிய ஜனாதிபதி,
“சமூக ஒருங்கிணைப்பு,  கல்வி, சுகாதார வசதிகள், நவீன தொடர்பாடல் போன்றவற்றில் இலங்கையர்கள் மிகவும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த வசதிகள் சகலருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அரசியல் ரீதியாக வலுவூட்டுவதற்கு மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவது முக்கியமான விடயமாகும்”. என்றார்.
மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் சேவையாற்றுவதற்கு இந்த சார்க் அமைப்பானது ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அத்துடன், ஒருவரின் மன அமைதி அவரிலேயே தங்கியிருக்கின்றது. அங்கு மற்றொரு எஜமானர் இருக்க முடியாது என்று கௌதம புத்தரின் வார்த்தைகளை தமது உரையின் போது ஜனாதிபதி  நினைவுபடுத்தினார்.
மக்களின் ஆற்றலும் படைப்புத்திறனும் நாட்டுக்கு உன்னதமான வலுவை வழங்குவதால் அவர்களின் சிறப்புத் தேர்ச்சியை வளமூட்டுவதும் அபிவிருத்தி செய்வதும் சார்க் நாடுகளின் தலைவர்களாகிய தமது கடமை என அவர் குறிப்பிட்டார்.
சகல மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான ஆற்றல் உள்ள கருவியாக சார்க்கை உருவாக்குவதற்கான தமது தீர்மானத்தைஒன்றுபட்டு வலுப்படுத்துவோம் என அவர்  இதன்போது  உறுதியளித்தார்

No comments:

Post a Comment