தமிழ் சினிமாவில் வரும் அத்தனை வில்லத்தனங்களும் புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றப்படுகின்றன. காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பான நகர்வுகள் இடம்பெற்றாலும், இறுதியில் வில்லன்கள் தோற்றுப்போகும் அதே எதிர்பார்ப்புடன் கதாநாயகர்கள் பக்கம் அணிதிரள்வதில் மக்களும் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
தமிழின் நாயகர்களும், நவம்பர் மாத்தின் கதாநாயகர்களுமான மாவீரர்களைக் குறிவைத்தே அத்தனை வில்லத்தனங்களும் அரங்கேற்றப்படுகின்றன. சிங்களத்தின் இலக்குத் தவறாத குறியாக இந்தத் தமிழின வில்லன்கள் என்னதான் முயற்சிக்கின்றபோதும், வில்லன்களைத் தோற்கடிப்பதில் தமிழ் மக்கள் குறியாகவே உள்ளனர்.
'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது! எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்!' என்ற கீதையின் வார்த்தைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சரியாகவே பொருந்தி வருகின்றது.
மாவீரர்கள் என்ற மகத்தான அற்புதங்கள், அத்தனை தீயதையும் அழித்து, தம் இலட்சியத் தீயைப் புலம்பெயர் தமிழர் நெஞ்சங்களிலும் விதைத்து வருகின்றார்கள் என்பது சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்பி வருகின்றது. தமிழீழ தேசமெங்கும் காற்றிலும், மண்ணிலும், கடலிலுமாகக் கலந்து நிற்கும் காவல் தெய்வங்களது மூச்சுக்களைச் சுமப்பவர்களை மௌனிக்க மட்டும்தான் சிங்கள தேசத்தால் முடிந்திருந்தது. புதைக்கப்பட்ட உடலங்களையும், நினைவுக் கற்களையும், மாவீரர்களது கதை சொல்லும் தடயங்களையும் அழித்துவிட்டால், தமிழீழ நிலமும், காற்றும், கடலும், நீரும், ஆகாயமும் சிங்கள மயப்படுத்தப்பட்டுவிடும் என்ற சிங்களக் கனவுகளை இந்த மௌனங்கள் அச்சுறுத்தியபடியே உள்ளன.
தமிழீழத்தின் மௌனப்படுத்தல் மட்டுமே சிங்களத்தின் முள்ளிவாய்க்கால் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குப் போதுமானதானது அல்ல என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். இதனால்தான், முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக கே.பி. ஊடாக இரண்டு படைகள் உருவாக்கப்பட்டு புலம்பெயர் தளங்களில் இறக்கிவிடப்பட்டன. விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள்மீது தாக்குதல் தொடுப்பதற்காக 'தலைமைச் செயலகமும்', விடுதலைப் புலிகளது பலத்துக்கு ஆதார தளமாக இருந்த புலம்பெயர் தமிழ் மக்கள்மீது தாக்குதல் தொடுப்பதற்கு 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும்' களத்தில் இறக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், கே.பி.யின் வழிகாட்டலை ஏற்றுச் சிங்களத்தின் தலையாட்டிகளாகச் செயற்பட 'கிளைகள்' எனப்படும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தளங்கள் இசைந்து போகாத காரணத்தால், சிங்கள ஆட்சியாளர்கள் நேரடியாகக் களம் இறங்கினார்கள். அதன்படி, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களது நாடி, நரம்புகள் அத்தனையையும் அத்துபடியாகத் தெரிந்த கே.பி.யை கொழும்புக்கு நகர்த்துவதன் மூலம், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை செயலிழக்கச் செய்யலாம் என்ற சிங்கள தேசத்தின் முயற்சிக்கு மேற்குலகின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை.
சட்டத்தின் ஆட்சியும், மனிதாபிமான சிந்தனைகளும் கொண்ட மேற்குலகு சிங்கள ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்த குறைந்த பட்ச நியாயங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால், கே.பி. மூலமாகப் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பற்றிப் பெறப்பட்ட தகவல்களால் சிங்கள ஆட்சியாளர்களால் எந்தப் பயனையும் பெற முடியவில்லை. ஒரு சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டாலும், நீதி அவர்களுக்கு கருணை வழங்கியது. இதனால், சிங்கள தேசம் கே.பி. மூலமாக உருவாக்கப்பட்ட 'தலைமைச் செயலகம்' என்ற படையைக் களம் இறக்கியது. களத்தில் இறக்கப்பட்ட அந்தப் படை முதலில், சேதாரமின்றிப் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது. அது கைகூடாத வேளையில், அதனை நிர்மூலமாக்கும் வியூகத்தை வகுத்துச் செயற்படுகின்றது. அதன் இறுதி இலக்காக மாவீரர் தினம் குறிவைக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டத்தின் வழங்கல் தளமான புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபடுதல்களையும், சிங்கள தேசத்திற்கு எதிரான எழுச்சியையும் சிதைத்து, ஆயுத போராட்டம் மீதான அவர்களது நம்பிக்கையைத் தகர்த்து, ஒரு ஜனநாயக முலாமிட்ட தளத்தினுள் அவர்களை அடைத்து மௌனிக்க வைப்பது என்ற சிங்களக் கோட்பாட்டுடன் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற படையைக் களம் இறக்கியது.
முள்ளிவாய்க்காலில் உருவான களநிலை மாற்றத்தை முதலீடாக்கி, புலம்பெயர் தேசங்களில் பலம்பெருந்திய ஒற்றை அரசியல் சக்தியாக உருவாக்கப்படவிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய தளத்தின் நெகிழ்வற்ற போக்கு தடைக் கல்லாக அமைந்தது. அதனை முறியடித்து முன்நகர முனைந்த 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' கே.பி. குழுவினரை அதிக பட்சமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த நகர்வைப் புலம்பெயர் தமிழ் மக்கள் ரசிக்கவில்லை. ஆயுதப் போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்த வேளையில், ஜனநாயகத் தளமாக உருவாக்கப்பட்ட சிங்கள தேசத்தின் படையணியைத் தமதாக்கிக் கொண்டு, சிங்கள தேசத்தை முறியடிக்கும் தமிழ்த் தேசிய தளங்களின் முயற்சி கே.பி. குழுவினரால் முறியடிக்கப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த புலம்பெயர் தமிழ் மக்களது பார்வை மாற்றமடைந்த காரணத்தால், அதனால் தமிழ் மக்களை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. காலியாக்கப்பட்ட பிரதிநிதி இடங்களுக்குத் தேர்தல் நடாத்த முடியாத அளவிற்கு அதன் இருப்பு சீர்குலைந்து போனது. இதனால், சிங்கள தேசத்திற்கான இந்தப் படை தனித்துக் களமாட முடியாத நிலையில், தமைமைச் செயலகத்துடன் இணைந்துகொண்டது. தற்போது, இந்த இரு படையணிகளது இலக்கும் மாவீரர் தினத்தைக் குறி வைத்ததாகவே உள்ளது.
இங்கேதான், வில்லன்கள் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற முடிவைப் புலம்பெயர் தமிழ் மக்கள் எடுத்துள்ளார்கள். விடுதலைப் புலிகளது வீரத்தினாலும், தியாகத்தினாலும், போர்க்கள வெற்றிகளினாலும் அதற்கும் மேலாக, தேசியத் தலைவர் அவர்களது இலட்சிய உறுதியினாலும் திரண்டு பலம்பெற்ற புலம்பெயர் தமிழ்த் தேசிய தளத்தைப் பிளந்துவிட்டால் அல்லது சிதறடித்துவிட்டால் அதனை மீண்டும் உருவாக்குவது எப்போதும் சாத்தியமற்றது என்பதே சிங்களத்தின் நம்பிக்கை. அதை நோக்கியே சிங்களம் தனது படைகளை நகர்த்துகின்றது.
புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, எதிர்வரும் மாவீரர் தினம் இன்னொரு முள்ளிவாய்க்கால். இங்கே மரணங்கள் நிகழ்வதும், இரத்தங்கள் சிந்தப்படுவதும் தவிர்க்கப்பட்டதாக இருந்தாலும், குண்டு வீச்சும், எறிகணைத் தாக்குதலும் நடக்காத போர்க் களமாக இருந்தாலும், இலக்கு தமிழ்த் தேசியமே. இந்தப் போர்க் களமும் சிங்களத்தால் வெற்றி கொள்ளப்பட்டால் இன்னமும் பல தலைமுறைகளுக்கு ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் கிடைப்பது பின்போடப்பட்டு, தமிழீழம் என்பது மாவீரர்களது கனவாகவே நிலைபெற்றுவிடும்.
- அகத்தியன்

No comments:
Post a Comment