Translate

Wednesday, 16 November 2011

'இலக்கு - இலக்கிணை அடைதல்'


பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் 'இலக்கு - இலக்கிணை அடைதல்' என்ற நிகழ்வினை உங்கள் ஊடகங்களில் பிரசுரித்து எங்களின் இவ் முயற்சிக்கு உதவிடுமாறு கேட்டுகொள்கின்றோம்

நன்றி

தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்
சஞ்சய்

பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ் 
பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர் 
அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும்
'இலக்கு - இலக்கிணை அடைதல்'

திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள் 
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு 
தயக்கம் காட்டி வருகின்றார்கள். விண்ணப்ப நடைமுறைகளை 
கையாளும் முறையில் இருக்கும் குழப்பமும் இதற்கு
ஒரு காரணமாக உள்ளது. தமிழ் இளையோர் அமைப்பு இந்த
குழப்பத்தைத் தீர்த்து உங்களின் தயக்கத்தை போக்குவதற்காக
இவ் ஒழுங்கிணை மேற்கொண்டுள்ளது.

விண்ணப்ப நடைமுறை, நேர்முக செயல்முறை மற்றும் ஒரு கேம்பிரிஜ்
மாணவனின் வாழ்க்கைமுறை என்பன பற்றி உங்களுடன் உரையாடுவதற்கு
கேம்பிரிஜ் பல்கலைக்கழக பிரதிநிதிகள் தயாராகவுள்ளனர்.

தற்போது GCSE மற்றும் AS Level படிக்கும் மாணவர்கள் இதற்கு பதிவு
செய்யலாம். குறைந்தளவு இடங்கள் உள்ளதால் முதலில் பதிவு 
செய்பவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும்

No comments:

Post a Comment