சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம்
காங்கிரசு என்ற மாபெரும் இன எதிரியை அடையாளம் காட்டி அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எமக்கு, எதிரிகளின் சீறிப் பாயும் தோட்டாக்களுக்கு மத்தியில் சகத்தோள்களின் அக்கறையில்லாத அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற உறுத்தலும் வருத்தமும் இருந்தது உண்மைதான். இந்த பத்தி கூட அவதூறுகளுக்கு எதிரான விளக்கம் அல்ல. மாறாக எதுதான் உண்மை என்பதற்கான மீள் வாசிப்பு. அவ்வளவே. எங்கள் தோள்கள் மேல் கைபோட்டு சொல்லும் அக்கறையுடனான விமர்சனங்களுக்கும், உண்மைக்குப் புறம்பான அவதூறுகளுக்குமான வேறுபாட்டினை நாம் அறிவோம். எம் மீதான, புதிதாக தோன்றியிருக்கும் இன ஆதரவு அரசியலின் மீதான அக்கறையில் விமர்சனக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தோழமைகளின் கருத்துக்களில் நாங்கள் என்றென்றும் நம்பிக்கையும், அன்பும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்............ read more
No comments:
Post a Comment