Translate

Sunday, 18 December 2011

மிஸ்டு கால் கொடுத்து மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்!


மரண தண்டனை ஒழிப்போம்!                                                                 மனிதநேயம் காப்போம்!!

இன்று  17/12/2011  சனிக்கிழமை காலை 12.00 மணிக்கு  அகில இந்திய அளவில் ஒரு மிஸ்டு கால் (missed call) தருவதன் மூலம் மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்களின் ஆதரவு திரட்டும் எண்ணத்தில் திரைப்படத்துறையினர் ஒரு நம்பரை  வெளியிட்டனர் . எனவேமரண தண்டனைக்கு எதிராக நமது எதிர்ப்பை அந்த எண்ணில் பதிவு செய்வது என்பது நமது வரலாற்றுக் கடமையாகும்.


மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு  சார்பாக மூன்று தமிழர் உயிர் காக்கவும்,புத்தன்,காந்தி, வள்ளலார்  பிறந்த இந்த மண்ணில் தூக்கு தண்டனையே இல்லது ஒழிக்கவும்அடுத்த கட்ட போராட்டமாக இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக பொதுமக்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.
திரைப்படத்துறையினர் மட்டும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு மானுடத்தின்பால்நீதியின்பால் அக்கறை உள்ள பத்திரிக்கையாளர்களும்ஊடகவியலாளர்களும்  பங்கேற்றனர்
கலந்துகொண்டவர்கள் ;                      
                                            இயக்குனர்  திரு .மணிவண்ணன்,
                                            நடிகர்              திரு .சத்யராஜ் ,
                                            இயக்குனர்  திரு .சேரன்
                                            இயக்குனர்  திரு வெற்றிமாறன்
                                            இயக்குனர்  திரு. சசிகுமார்
                                            இயக்குனர்  திரு.சமுத்திரகனி
                                            பாடலாசிரியர் திருமிகு .தாமரை
                                            இயக்குனர்  திரு வ.கௌதமன்
                                            இயக்குனர்  திரு ராம்
                                            இயக்குனர்  திரு.சீனு ராமசாமி
                                            இயக்குனர்  திரு.தாமிரா
நேரம் ; 17/12/2011  சனிக்கிழமை  காலை  10.45
இடம் ; பிரஸ் கிளப் ,சென்னை
தொடர்புக்கு :  சரவணன் 9994305520

No comments:

Post a Comment