எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....
பெண்கள் காதலிப்பது உண்மையாகவா அல்லது சும்மா டைம் பாஸிற்கா??
இந்த சந்தேகம் வரக்காரணம் இன்று நடந்த ஒரு சம்பவம்.. நானும் என் நண்பன் ஒருவனும் வீதியால் வந்துகொண்டிருந்தபோது எம்மைக்கடந்து இரு பெண்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் ஏதோ சொல்ல அதற்கு பின்னால் இருந்து வந்த பெண் சொன்னார் “ நான் அவனத்தான் கட்டுவன், ரமேஷ சும்மா பகிடிக்குத்தான் லவ் பண்ணுறன்”
என்ன கன்றாவிடா இது. இது ஒன்னும் கதை இல்லைங்க.. இன்று உண்மையாவே நடந்த ஒரு சம்பவம். இதெல்லாம் யாழ்ப்பாணத்தில இப்ப சகஜமாகிட்டுது. ஒருவனை காதலிப்பதும் இன்னொருவனை திருமணம் செய்வதும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பகுதி பெண்களுக்கு பொழுதுபோக்காக போய்விட்டது.
மேலே குறிப்பிட்ட சம்பவம் நகைச்சுவையாக தோன்றினாலும் அதன் பின்னணியில் பாரிய அசம்பாவிதங்கள் மறைந்துள்ளன. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்துப் பெண்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்.அனைத்து துறைகளிலும் ஏனைய காலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் இப்போது பெண்களின் செல்வாக்கு அதிகரித்தே காணப்படுகிறது. ஆனால் இதில் அநேகமானவர்களின் முன்னேற்றம் எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், குறிப்பிட்ட ஒரு காலம் வரை மேலே கூறிய சம்பவம் போன்று ஒரு ரைம் பாஸ் வாழ்க்கையாகவும் பின்னரான காலப்பகுதிகளில் அது சார்ந்து வரும் பிரச்சினைகளால் இன்னல் படுவதுமேயாகும்.
காதல் தோல்விகள் ஆண்களாலா பெண்களாலா அதிகம் ஏற்படுகிறது என்று பார்த்தால் இரு பகுதியினருமே சமமானவர்கள்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தோற்கும் காதல்களில் பெரும்பாலானவை பெண்களினாலேயே ஏற்படுகின்றன என்பதுதான் உண்மை. அது இது போன்ற டைம் பாஸ் காதலிகளினாலோ அல்லது குடும்பத்தவரின் அழுத்தங்களால் சரியான முடிவெடுக்கமுடியாமல் தடம் மாறுபவர்களாலோ சரி பெரும் பங்கு பெண்களையே சாரும். தீர்க்கமான முடிவெடுக்கும் தருணங்களில் அனேகமான பெண்கள் தோற்றுவிடுகிறார்கள். தனக்கு சரியான துணையை தேர்ந்தெடுக்கும் சமயத்திலோ, அந்த துணைக்காக முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்திலோ, தன் எதிர்கால வாழ்க்கையை தீர்மாணிக்கும் சமயங்களிலோ ஏற்படும் சிறிய சறுக்கல்கள் கூட அவர்களின் எதிர்காலத்தில் பூதகரமான பிரச்சினைகளாக உருவெடுக்கிறது.
இன்னுமொரு முக்கியமான விடயம் இவ்விடயத்தில் பெண்கள் மீது அதிகம் பழி சுமத்தப்படுவதற்கு காரணம் ஆணாதிக்க சிந்தனையே என்று கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்மாணம் எடுக்கும் விடயத்தில் பெண்களை விட ஆண்கள் உறுதியாகவே இருக்கிறார்கள்.
இப்படி தகுந்த நேரத்தில் சரியான முடிவெடுக்காமையின் விளைவே அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொலைகள். இரண்டுமே ஒரே மாதிரியாக இடம்பெற்ற சம்பவங்களே. அதாவது கொல்லப்பட்ட இரு பெண்களும் ஒருவனை காதலித்துவிட்டு பின்னர் வேறு ஒருவனை திருமணம் செய்தவர்கள். அதில் ஒரு பெண் காதலித்தது சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் பையனை. வசதி வாய்ப்புடன் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததும் அவனை கைகழுவி விட்டுவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம்பிடித்துக்கொண்டார். வேதனையில் துடித்த அந்த இளைஞன் சமயம் பார்த்து, அந்த பெண் தனியாக வந்தபோது கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு அந்த பெண் வந்த மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் அந்த பெண் மீது தவறு இருக்கலாம், அல்லது அவருக்கு ஏற்பட்ட அழுத்தங்களால் வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து இருக்கலாம். ஆனால் அவர் இந்த விடயத்தில் எடுத்த முடிவால் அவரது வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டது.
இது மட்டுமல்ல. இவை போன்ற ஏராளம் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் என்றாலும், பெரும் பங்கு பெண்களையே சாரும். அத்தோடு இதனால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாவதும் பெண்களே. நான் இங்கே பெண்கள் மீது மட்டும் தான் தவறு இருக்கிறது. ஆண்கள் உத்தமர்கள் என்று சொல்லவரவில்லை. ஆண்கள் தவறு செய்தால் அதற்கான தண்டனை பெற்றவுடனோ அல்லது கால ஓட்டத்திலோ அந்த தவறு சுவடு தெரியாமல் மறைந்து போகிறது. ஆனால் பெண்கள் செய்யும் தவறு அவளை மாத்திரமல்லாது அவளது சுற்றத்தையும் நீண்ட காலத்திற்கு பாதிக்கிறது என்பதுதான் உண்மை.
நான் உயர்தரத்தில் படித்தபோது எமது வகுப்பில் 31 மாணவர்கள். அதில் இருவர் மட்டுமே ஆண்கள். ஏனைய 29 பேரும் பெண்கள். அந்த வகையில் பெண்களோடு அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. அப்போது நான் அறிந்துகொண்டது “ காதல் விடயத்தில் பெண்கள் அதிகம் அவலப்படுவதற்கு காரணம் அவர்கள் எடுக்கும் மதில்மேல் பூனை போன்ற தீர்மாணங்களே”
நான் உயர்தரத்தில் படித்தபோது எமது வகுப்பில் 31 மாணவர்கள். அதில் இருவர் மட்டுமே ஆண்கள். ஏனைய 29 பேரும் பெண்கள். அந்த வகையில் பெண்களோடு அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. அப்போது நான் அறிந்துகொண்டது “ காதல் விடயத்தில் பெண்கள் அதிகம் அவலப்படுவதற்கு காரணம் அவர்கள் எடுக்கும் மதில்மேல் பூனை போன்ற தீர்மாணங்களே”
No comments:
Post a Comment