இங்கிலாந்தின் ஆண்களை விடக் குறைவாகச் சம்பாதித்தாலும் அதிகமாகச் சேமிப்பவர்கள் பெண்களே என்று ஹேலிஃபாக்ஸ் சேமிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

பெண்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவீதம் சேமிக்கிறார்கள், ஆண்கள் 23 சதவீதம் மட்டுமே சேமிக்கின்றனர். இங்கிலாந்தின் வடபகுதியிலும், ஸ்காட்லாந்திலும் வாழும் ஆண்கள் மட்டும் அதிகமாகச் சேமிக்கின்றனர் என்று இந்த ஹேலிஃபாக்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கு இரண்டு வழிகளில் சேமிப்பை உயர்த்துகின்றனர், ஒன்று பணக்காரத் துணைவர்கள், வரி ஏய்ப்புக்காக தங்கள் பணத்தை பெண்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடுகின்றனர். இரண்டாவது வயதான கணவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிதி இருப்பு மனைவிமார் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்தக் காரணங்களால் பெண்களின் வங்கிக் கணக்கில் வைப்புநிதி உயர்கிறது. இங்கிலாந்தின் தென்பகுதியில், தென் கிழக்கு மற்றும் தென்மேற்கில், கிழக்கு ஆங்கிலியாவில் அப்பகுதியின் மொத்த ஆண்டு வருமானத்தில் 29 சதவீதம் அல்லது 8,734 பவுண்டு வங்கியிருப்பில் வைக்கப்படுகிறது.

ஹேம்பிள்ட்டன் மற்றும் வடக்கு யார்ஷயரில் உள்ளவர்கள் தம் சராசரி வருமானத்தில் 58 சதவீதம் அதாவது 11,316 பவுண்டு மிச்சப்படுத்துகின்றனர். கியும்பிரியா மாவட்டத்தில் ஏடென், டோர்செட் மாவட்டத்தில் கிரைஸ்ட் சர்ச், சுஃபோல்க் மாவட்டத்தில் வடஃபோங்க் மற்றும் வேவனீ நகரங்களில் வருமானத்தில் பாதிப்பணத்தை சேமிப்பாக வைத்திருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் பணி ஓய்வு பெற்றவர்கள் என்பதால் சேமிப்பு உயர்ந்து செலவு குறைகிறது. இதற்கு நேர்மாறாக, இலண்டனில் வடபகுதியில் உள்ள இஸ்லிங்ட்டன் என்ற நகரத்தில் இளைஞர்கள் 7,133 பவுண்டு சேமிக்கின்றனர்.

தேசிய சராசரியில் இத்தொகை சிறிதளவே குறைந்துள்ளது எனினும் சராசரி உள்நாட்டு வருமானத்தில் 12 சதவீதத்திற்கு நிகரானதாகும். சேமிப்பு குறைந்த மாவட்டங்கள் ஒன்பதில் மிக மிகக் குறைந்த அளவைக் காட்டுவது இலண்டன் மாநகரமே என்பது இந்த அய்வறிக்கையின் முடிவாகும்.