Translate

Friday 30 December 2011

இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி: பான் கீ மூன் திணறல் !


பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளார்.
இந்த காணொளி குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்தும் ஆராய்ந்த பின்னரே கருத்து வெளியிடப்படும் என இன்னர் சிட்டி பிரஸிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.பல தடவைகளாக இது தொடர்பான கேள்வியை இன்னர் சிட்டி பிரஸ் பான் கீ மூனின் பேச்சாளர்களிடம் எழுப்பி வந்துள்ளது. இறுதியாக நேற்று எழுத்து மூல கேள்வி ஒன்றின் மூலம் பான் கீ மூன் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்தாரா? இல்லையா? என்பதற்கு பதில் தருமாறு இன்னர் சிட்டி பிரஸ் கோரியிருந்தது .அதில் ஆம் அல்லது இல்லை என்பதையாவது குறிப்பிடுமாறு கோரப்பட்டிருந்தது.

இதற்கு சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கி பதிலளித்துள்ளார். இலங்கையின் கொலைக்களம் தொடர்பான கேள்விக்கு ஆம் என்று பதில் வழங்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் இறுதிப்போரின் போது பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் பங்களிப்புடன் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையின் கொலைக்களம் காணொளியை பான் கீ மூன் எப்போது பார்வையிட்டார். அது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்றும் இன்னர் சிட்டி பிரஸ் எழுத்துமூல கேள்வியை எழுப்பியிருந்தது. அதற்கு மார்டின் நெசர்கி, இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான அறிக்கையும் பான் கீ மூன் ஆராய்வதாகவும் பின்னர் இது குறித்தும் கருத்துக்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment