Translate

Thursday, 12 January 2012

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்


பிரித்தானியா - லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதியமைச்சகத்தின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் குறித்து இப்பொதுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15 சனவரி (15-01-2012) North Harrow Home Guard Club, Broad Walk, Pinner Road, North Harrow, HA2  7TA(Car Park:  North Harrow Station Car Park Tube Station: North Harrow) எனும் முகவரியில் மாலை 7 மணிக்கு இப்பொதுக் கூட்டம் இடம்பெறுகின்றது.


பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன் அவர்களும் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக உரையாற்றுகின்றனர்.
இதேவேளை நிதியமைசகத்தின் பிரித்தானிய செயலர் வசந்தன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் சங்கீதன்(BTU) சுகந்தகுமார் (BTF) மாறன்(TFS)  உட்பட பல தமிழர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்து கருத்துரைக்கவுள்ளனர்.
இதேவேளை நா.த.அரசாங்கத்தின் அரசியில் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்மளிக்கப்படவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அங்கீகாரமே தமிழீழ அரசுக்கான திறவுகோலாக அமையுவுள்ள நிலையில் தமிழீழ அரசாங்கத்ததை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கெடுக்குமாறு வேண்டப்படுகின்றது.


No comments:

Post a Comment