நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து
சென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலா ளர் என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற் றுள்ள டாக்டர் வெங் கட்ராமன் ராமகிருஷ் ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதி டமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள் ளார்.
சென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலா ளர் என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற் றுள்ள டாக்டர் வெங் கட்ராமன் ராமகிருஷ் ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதி டமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள் ளார்.
ஆக்கபூர்வமான ஆற்றல், எதிர்மறை ஆற் றல் என்ற சொற்றொடர் களை பல போலி மருத் துவர்கள் கூறுவது வெறும் பிதற்றல் என் றும், அவற்றிற்கு உண் மையான பொருள் எதுவும் இல்லை என் றும் அவர் கூறினார். ஆனால் அறிவியலோ ஒரு ஆற்றலைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக் கம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.
லண்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஆர்.சி. அணுஉயிரியல் சோதனை சாலையில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவ ராக இருப்பவர் ராம கிருஷ்ணன். இவர் தமிழ் நாட்டிலுள்ள சிதம் பரத்தில் பிறந்தவர்.
பாரதிய வித்யா பவனால் ஏற்பாடு செய் யப்பட்ட இரண்டாவது எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொ ழிவை ஆற்றிய ராம கிருஷ்ணன், ஒரு நல்ல அரசு எவ்வாறு மக்களை அவர்களின் மோசமான உணர்வுகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அது போலவே நம்மை நமது பாகுபாடு நிறைந்த கண் ணோட்டத்தில் இருந் தும், மூடநம்பிக்கைகளி லிருந்தும் அறிவியல் காப்பாற்றுகிறது. அறி வியல் நடைமுறைகள் மூடநம்பிக்கைகளின் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
முறை யான சோதனையினால் மெய்ப்பிக்கப்பட முடி யாத எந்த ஒரு நடை முறையோ, உயர் குடி மக்களின் விமர்சனமோ மற்றும் நவீன அறிவியல் மீதான கட்டுப்பாடு களோ எந்த அறிவியல் பெயரைக் கொண்டி ருந்தாலும், அறிவியல் என்று அவற்றைக் கருத முடியாது. அறையின் வெப்பத் தில் அணுவைப் பிளப் பது என்பது போன்ற ஃப்ளைச்மேன்-பான்ஸ் கருத்துகளும், அதிக அளவு வைட்டமின்-சி புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற லைனிங் பாலிங்சின் கருத்தும் தவறானவை என்று மெய்ப்பிக்கப்பட்டுள் ளதை அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட் டார்.
சோதனைகள் மூலம் வெற்றி!
புள்ளிவிவரங்கள் வேறுவிதமான முடிவு களை அளிக்கும்போதும், தவறான மூடநம் பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்று கூறிய அவர், குளிர்ந்த வெப்பநிலையில் அணு வைப் பிளப்பது மற்றும் வைட்டமின் சி-யின் பயன்பாடுகள் பற்றி, நூற்றுக்கணக்கான இணைய தளங்களும், செய்திக் கட்டுரைகளும் தொடர்ந்து வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன. சோதனையில் வெற்றி பெற்ற மருந்தோ அல் லது குறிப்பிட்ட சிகிச் சையோ நோய் குணமா வதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியுமேயன்றி, தற் செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்லது தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வு காரணமாக இருக்க முடியாது.
எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் களுக்கு ஹோமியோபதி மருத்துவம் பரிந் துரைக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட டாக்டா ராமகிருஷ்ணன் இந் நோய்களுக்கு உண் மையில் பயன்தரும் வேறு மருந்துகள் உள் ளன என்று கூறினார். இது பற்றி முடிவெடுப் பதில் சோதிடம் தவ றாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும் அவர் கூறினார். நியாய உணர்வு, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் பய னுள்ள நடவடிக்கை களை மேற்கொள்ள விடாமல் மக்களை ஹோமியோபதியும், சோதிடமும் தடுத்து வேறு தவறான பாதை யில் செலுத்தி விடு கின்றன.
மூடநம்பிக்கை களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச் சாரம் எப்போதுமே மிகுந்த அளவிலான கேட்டினை உருவாக்கும் என்று அவர் கூறினார். என்றாலும் தாங்கள் அளிக்கும் மருந்துகளின் பாதிப்பை உயர்த்தும் ஆற்றல் படைத்த ஆலோ சனைகளை மருத்துவர் கள் அளிக்கலாம் என் றும் அவர் கூறினார்.
எதனையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடாமல், அதனை சோதனை செய்து பார்ப்பது, கருத்தூன்றி ஆய்வு செய்வது, சிறு நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளை விட சோதனை செய்து பார்ப்பதை நம்புவது ஆகிய கருத்துகளே நவீன அறிவியல் உருவாக்கத்தின் மய்யக் கருத்தாக இருப்பவை என்பதுடன், மிகவும் முக்கியமான வழிகாட்டும் கொள்கையாக இருக்கின்றது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.
நம்பிக்கை மோசமானது
16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலம் முதற்கொண்டு அறிவியல் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கியமான சிந்தனை சுதந்திரமின்றி நல்ல அறிவியல் வளர்ச்சி பெற இயலாது. முழு சிந்தனை சுதந்திரம் இன்றி, தொடர்ந்த காலங்களில் மிகச் சிறந்த அறிவியல் இருப்பதும் இயலாதது என்று அவர் கூறினார்.
ரிபோசோம்ஸ் என்னும் புதிய பாதை படைக்கும் அவரது புதிய கண்டுபிடிப்புக்காக வேதியிய லுக்கான நோபல் பரிசு அவருக்கு 2009 இல் வழங்கப்பட்டது. கோபர்நிகஸ், கலீலியோ ஆகியோரின் காலங்களில்தான் அறிவியல் நவீன தோற்றம் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார். உற்று அறிவதும், நம்பிக்கையும் மொத்தமாகத் தவறாகிப் போகும்போது, உற்று அறிவதை விட அதிக அளவில் தவறாகிப் போவது நம்பிக்கைதான் என்ற கருத்தை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
அய்ரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி உணர்வு இக்கருத்துக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. யார் எவ்வளவு அழகாக சொன்னாலும், அது சோதனையால் மெய்ப்பிக்கப்பட முடியாவிட்டால், அது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.
இறுதியில் சோதனையில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்று சமூகங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல நவீன அறிவியலை உருவாக்கியது. இந்த உலகின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனமான பவுன்டேஷன் ஆப் ராயல் சொசைடியின் எவரது சொல்லின்படியும் அல்ல என்ற கொள்கையே நவீன அறிவியலை விளக்குவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சோதனையில் தோல்வி அடைந்த பிறகும்கூட உலவும் மூடநம்பிக்கை
சோதனையில் தோல்வியடைந்த பிறகும் சில பரவலான மூட நம்பிக்கைகள் தொடர்ந்து சமூகங்களில் நிலவுகின்றன. உண்மையான காரணத்தையும், தற்செயலாக நடைபெறுவதையும் பிரித்துக் காண முடியாத மனிதரின் இயல்பான தன்மைதான் இதன் காரணம். கணிதம், இசை, கலை போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்திய நடைமுறைகளை அங்கீகரிக்க விரும்பும் மனநிலை, அத்தகைய நடைமுறைகள் இல்லாத இடங்களிலும் அவை இருப்பது போன்று நம்மை கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.
தனது குறைகளைத் திருத்திக் கொண்டு தன்னைத்தானே சரி செய்து கொள்ள இயன்றதுதான் அறிவியல். புதிய ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் வந்த பிறகு, அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.
இவ்வாறு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியலின் பண்புதான், மற்ற மூடநம்பிக்கை நடைமுறைகளில் இருந்து அதனைப் பிரித்து அடையாளம் காட்டுவதாகும். அறிவியலில் தவறு நேர்வது கேடுபயப்பதில்லை; ஆனால் தவறான விளக்கம் அளிப்பது உண்மையிலேயே பெருங்கேடு விளைவிப்பதாகும்.
No comments:
Post a Comment