Translate

Saturday 14 January 2012

மதுக்கடைகளை மூடக்கோரிபோராட்டம் நடத்துவேன்: தங்கர்பச்சான்

மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன்:
தங்கர்பச்சான் 

மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று திரைப்பட இயக்குநரும், அனைத்து உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் தெரிவித்தார்.



தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் கடலூர் மாட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலாளர் அதியமான் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநரும், அனைத்து ஊழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாணவர்களுக்கான கல்விச்செலவை அரசே ஏற்கவேண்டும்,
 
பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீளும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், 

கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.
அப்போது அவர்,    ’’டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பது இந்த ஆட்சிக்கு தலைகுனிவாகும். மூளை இருந்தால்தான் ஒருவன் சிந்தித்து செயல்பட முடியும். அதை இல்லாமல் செய்துவிடுகிறது மது. சப்பாட்டுக்கு வழி இருக்காது, ஆனால் மதுவை குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கிறான். பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.

கடந்தகால ஆட்சியாளர்கள் உணர்ச்சிபூர்வமான மக்களை உருவாக்கவில்லை. சிறந்த கல்வியை கொடுக்கவில்லை. மதுவை கொடுத்து சிந்தனையையே மாற்றி விட்டார்கள். மது பாட்டிலில் மது உயிருக்கு கேடு, வீட்டுக்கு கேடு, நாட்டுக்கு கேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஏன் அதை விற்பனை செய்ய வேண்டும்.

தானே புயலால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை குடும்பங்களுக்கு செல்லவில்லை. மாறாக டாஸ்மாக் கடைகளுக்குத்தான் செல்கின்றன. இதை நான் கண்டிக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக ஆவண குறும்படத்தை பாதியில் நிறுத்திவிட்டு இங்கே வந்துள்ளேன்.

அடுத்து மதுக்கடைகளின் முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன். இனி இளைஞர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்’’என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment