லண்டன் தமிழனால் வெள்ளைக்காரனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!
அதிர்ஷ்ட லாப சீட்டு மூலம் பணத்தை அள்ளிக்கொட்டும் நாடுகளில் பிரித்தானியா முதன்மையானது, இம்முறையும் பெரியதொரு தொகையை பரிசளித்து பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது,
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இதை விற்ற கடைக்காரர் ஒரு தமிழன். அதுவும் இதை விற்றதினம் அவருக்கொரு குழந்தையும் பிறந்துள்ளது, டானியல் விமலேந்திரனாதன் என்பவரே இதன் உரிமையாளராவார் (Day Today, 304-306 broxtowe lane, நொட்டின்காம் NG8 5NB ) Catherine Bull,(35 ) சொந்தமாக கட்டிட தொழில் செய்பவர்,
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு அதிர்ஷ்டம் வீட்டையே பெயர்த்துக்கொண்டு வந்துள்ளது, பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த லொட்டரி அதிர்ஷ்டம் மூலம் £40,627,241 பணத்தொகை சொந்தமாகியுள்ளது.
இதை வைத்து முதலில் ஒரு வீடு வாங்க எண்ணியிருப்பதாக Bull தெரிவித்தார், காலநிலை மாற்றம் காரணமாக சில நேரங்களில் வேலைகள் கிடைப்பதில்லை இதனால் தான் அன்றைய பொழுதுக்கான உணவையே மறந்துவிடுவாதாகவும்,
தான் இவ்வளவு வருடங்களாக உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 2007 ஆம் ஆண்டு £250 மில்லியன் பரிசாக வழங்கப்பட்டது, இதுவரை வழங்கப்பட்ட பரிசுத்தொகைகளில் அதிகமானது இதுதான்.
No comments:
Post a Comment