Translate

Tuesday, 31 January 2012

இலங்கைக்கு ஒன்று இந்தியாவுக்கு ஒன்று: ஐ.தே.க. அதிருப்தி _

 தேசிய பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்தியாவுக்கும் அதேநேரம் உள் நாட்டின் ஊடக பிரதிநிதிகளுக்கும் கூறப்பட்ட கருத்துக்கள் பரஸ்பர விரோதமானவை. 

ஜனாதிபதியின் இத்தகைய நிலைப்பாடு தீர்விற்கு வழிவகுக்காது. அரசாங்கம் தீர்வு விடயத்தில் உண்மைத்தன்மையான நகர்வுகளை மேற்கொண்டால் முழு ஆதரவினைத் தருவதாகவும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தேசிய பிரச்சினைக்கு மிக விசாலமான தீர்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் நடைமுறைப்படுத்த அரசு முற்பட வேண்டும். மாறாக ஏற்கனவே நடந்தவை போன்று ஆணைக்குழு பரிந்துரைகளையும் குப்பைக் கூடைக்குள் வீசிவிட முயற்சிக்க கூடாது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

No comments:

Post a Comment