Translate

Monday, 20 February 2012

22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்”


லண்டனிலிருந்து ஆரம்பமாகி இன்று 22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்” பிரான்ஸ்  Thorey-en-plaine எனும் பகுதியைச் சென்றடைந்ததுலண்டனிலிருந்து ஆரம்பமாகி இன்று 22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்” பிரான்ஸ்  Thorey-en-plaine எனும் பகுதியைச் சென்றடைந்தது.
இன்று காலை 10:10 ற்கு Darois எனும் பகுதியிலிருந்து ஆரம்பமான இன்றைய நடைபயணம் 25.4 கி.மீ தூரத்தைக் கடந்து Thorey-en-plaine எனும் இடத்தைச் சென்றடைந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை நோக்கிய இந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான தமிழர்களின் நடைப்பயணம் பிரென்சு ஊடகங்களின் கவனத்தையும்  பெற்றுள்ளது.ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுச் செல்லும் இந்த நடைப்பயணம் குறித்தான செய்தி, பிரென்சு ஊடகங்களில் வெளியாகியமையானது  விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இந்த நடைபயணத்தை மேற்கொள்ளும் ஜெயசங்கர் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் இன்றோடு 692.4 கி.மீ தூரத்தை நடந்து சென்றுள்ளனர்.
கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப்ரவரி  27ம் நாளில்  “நீதிக்காய் ஒன்றுபடுவோம்” எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைபயணத்தை மேகொள்ளும் திரு.ஜெயசங்கர் அவர்கள் நேற்றையதினம் வழங்கிய நேர்காணல் இங்கு காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment