Translate

Monday, 20 February 2012

அமெரிக்காவுக்கு பாடம் புகட்டப்போகிறது ஹெல உறுமய


அமெரிக்காவின் அழுத்தங்கள், குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு எதிராக போராடும் காலம் வந்து விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்களக் கடும் போக்காளர்களை ஒன்றிணைத்து, அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இலங்கையிலும் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அத்துடன் இலங்கைக்கு எதிராக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்பை மீறி இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கும், என்பன போன்ற விடயங்கள் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment