"இலங்கையில் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
சனல் 4 வெளியிட்ட "இலங்கையில் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனல் 4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்ச்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், "இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாகக் கூறியிருந்தது. ___
No comments:
Post a Comment