Translate

Monday 20 February 2012

வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடத்தை இலங்கையிலும் புகட்ட ஜாதிக ஹெல உறுமய தீர்மானம் _


  பெரும்பான்மை சிங்கள கடும் போக்காளர்களை ஓரணியில் இணைப்பதற்கான திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இங்கு நாம் புகட்ட வேண்டுமென்றும் ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. 



கடந்த வாரம் பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் அதன் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் கூடிய மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை தடுக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கும்.

இதேவேளை, அமெரிக்காவின் அழுத்தங்கள், குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எனவே இதற்கு எதிராக போராடும் காலம் வந்துவிட்டதாகவும் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிங்களக் கடும் போக்காளர்களை ஒன்றாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் வியட்நாமில் அமெரிக்கா கற்ற பாடத்தை இலங்கையிலும் கற்பிக்க வேண்டுமென்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாம் ___

No comments:

Post a Comment