Translate

Wednesday, 15 February 2012

70 -ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் அனாதைகளாக இறந்த அடிமைத் தமிழ்த் தொழிலாளர்க்கு எமது அஞ்சலி !


70 -ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் அனாதைகளாக இறந்த அடிமைத் தமிழ்த் தொழிலாளர்க்கு எமது அஞ்சலி !

1942-45 ஆண்டுகளில் ஜப்பானியர்களால் 2- வது உலகப் போரின்போது தாய்லாந்து - பர்மா தொடர்வண்டி போடப்பட்டது. இதில் அனாதைகளாக இறந்த 90000 - பேரில் பலர் தமிழர்கள் ! 

அவர்கள் நோயினாலும், பட்டினியாலும் அனாதைகாளாக இறந்து அழிந்தது மலேயாவிலிருந்த அவர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பது கொடுமையல்லவா ? அந்த வலி பட்டவருக்கே புரியும் !

இங்கிலாந்து, கனடா, டச்சு , ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து இந்த மரண ரயிலில் இறந்த தான் நாட்டு படை வீரர்கள் உறவினர் இன்றும் வந்து அஞ்சலி செய்கிறார்கள் !

ஆனால் அநாதை தமிழன் அழிந்ததை தமிழராகிய நாம் அறிவோமா ?

நாம் தான் அறியாதவர்கள் ஆயிற்றே  ! எதைப் பற்றியும் கவலைப் படாதவர் ஆயிற்றே !

தஞ்சை  கோ.கண்ணன் 

காணொளி காண இணைப்பை சொடுக்குக :90000 பேர் பலி ! சயாம் மரண ரயில் (1942-45) ! Death Railway !
http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm

No comments:

Post a Comment