ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும் – ஓர் ஆய்வரங்கம் | 17-02-2012 | மாலை 6.00மணி | தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை
ஊடகவியளாலர்களுக்கான அழைப்பு
ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும் – ஓர் ஆய்வரங்கம்
நாள்: 17-02-2012, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை
பெறுநர்,
செய்தி ஆசிரியர்
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இலங்கை தொடர்பாக வெளிவந்துள்ள டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, இலங்கை அரசின் “கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை” ஆகியன இவ்விவாதத்தில் முக்கிய பங்காற்றும். இந்த அடிப்படையில் ‘ஐ.நா மனித உரிமை ஆணையமும் இலங்கையின் போர்க்குற்றங்களும்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தினை சென்னையில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" ஏற்பாடு செய்துள்ளது.
ஆய்வரங்கத்தின் பேச்சாளர்களும் தலைப்புகளும்:
பேரா.பால்நியூமென்: டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைகளுடன், இலங்கை அரசின் “கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை” – ஓர் ஒப்பீடு
பேரா.மணிவண்ணன் : இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை – அனைத்துலக நாடுகளின் நிலைப்பாடு
தோழர்.தியாகு: 2009 லிருந்து 2012 வரை இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடும்,செயல்பாடும்
இந்த ஆய்வரங்கம் குறித்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் செய்தியை கொண்டு சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இளங்கோவன் – 9884468039
போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - தமிழகப் பிரிவு
No comments:
Post a Comment