Translate

Wednesday, 15 February 2012

கற்றாழைக் குழம்பு

இன்று ஒரு அருமையான செய்தியைச் சொல்லப் போகிறேன். அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளவம்.
அதாவது சோற்றுக் காற்றாழையை பச்சையாக அப்படியே உண்ண முடியும் என்ற செய்தியை முன்னர் சொல்லியிருந்தேன். 


அதன் தொடர்ச்சியாக அதை ஏன் சமைத்து உண்ணக்கூடாது என்ற கேள்விக்குப் பதிலாக எங்கள் துணைவியாரின் உதவியுடன் அதை உணவுப் பண்டமாக செய்து உண்டு பார்த்ததில் நம்பமுடியாத ஒரு உண்மையை நடைமுறையில் உணர்ந்தேன்.

ஆம் சோற்றுக் கற்றாழையை மருத்துவ மூலிகையாக மட்டுமின்றி சிறந்த உணவுப் பொருளாகவும் பயன்படுத்தலாம் என்பதே அது!

பாகற்காயை மசாலாவுடன் சேர்த்துக் குழம்பு வைப்பதைப் போலவே இதையும் செய்யலாம். முதலில் முட்களைமட்டும் சீவிவிட்டு (தோலைச் சீவவேண்டாம்)நீளவாக்கில் வெண்டைக்காய் அளவுக்கு நீளத் துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதை தண்ணீரில் கழுவி மீண்டும் சிறு துண்டுகளாக நறுக்கி மீண்டும் தண்ணீரில் நன்றாகக் கழுவி எடுத்தால் கசப்பு பெரும்பாலும் போய்விடும்.

அதன்பின் பாகற்காயைப் போலவே மசாலா அரைத்துக்கொண்டு புளி, நாட்டுச் சர்க்கரை ஆட்டிய தேங்காய் சேர்த்து குழம்பு வைத்தால் அருமையாக இருக்கும்.

முதல் தடவையிலேயே மிகவும் சுவையாக இருந்ததால் நான் சாதத்துடன் வேறு எதையும் சேர்க்காமல் பசியார உண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! மற்றபடி சுவையைக் கூட்டப் பெண்களுக்குத் தெரியும்.

ஒவ்வொருவரும் இதை வீட்டிலேயே பயிர் செய்து கொள்ளலாம். தண்ணீர் இல்லாமலே வளரக் கூடியது. தொட்டிகளிலும் மாடிகளிலும்கூட வளர்க்கலாம்.

இதை சாப்பிடும்போது உணவாகமட்டுமின்றி மிகச்சிறந்த மருத்துவப் பண்புகளையும் நமக்கு வழங்குகிறது.

வீட்டில் இது இருந்தால் காய்கறி இல்லை என்ற பிரச்சினையும் எல்லை. செலவும் இல்லை. ஆனால் அதன் அருமையை உணரவேண்டும்.

ஒருமுறை உண்டு பாருங்கள்!

No comments:

Post a Comment