Translate

Wednesday, 15 February 2012

ஒரு சென்ட் ஒரு லட்சத்துக்கு விலைபோகும்

ஒரு சென்ட் ஒரு லட்சத்துக்கு விலைபோகும் என்ற கனவில் நிலமனைத்தையும் வீட்டுமனைகளாகவே விற்கும் கனவில் இருப்பவர்களை என்ன செய்வது?
இதுதான் பனங்கிழங்கு! ஒரு பத்துக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டால் அது ஒருநேர உணவுக்கு ஈடாகும்.


பனங்கிழங்கு மட்டுமல்ல. நுங்கு , பனம்பழம், பதனீர், கள்ளு, கற்கண்டு, கருப்பட்டி, இன்னும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பலவகை உணவுப்பொருட்கள் என ஒரு உணவுத் தொழிற்சாலையே அதில் அடங்கியுள்ளது. தவிர பனையில் பயன்படாத பகுதி எதுவும் இல்லை! 

நமது நாட்டில் பாசனவசதி இல்லாத நிலங்கள், பயனற்ற மேட்டுப்பகுதிகள், சாலையோரங்கள், ஏரி குளங்களின் கரைகள், கடற்கரை சார்ந்த பகுதிகள். இன்னும் வேறு பயிர் செய்ய இயலாத பாழ்நிலங்கள் போன்ற இடங்களில் மட்டும் எந்த வரட்சியிலும் சாகா வரம் பெற்ற இந்தப் பனைமரங்கள் நிறைந்திருப்பது உண்மையானால் நமது உணவுத் தேவையில் பாதியை இதுவே நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

ஆனால் இருப்பதையும் அழித்தொழிப்பதை அனுமதிக்கும் அரசுகளை என்ன செய்வது?

ஒரு சென்ட் ஒரு லட்சத்துக்கு விலைபோகும் என்ற கனவில் நிலமனைத்தையும் வீட்டுமனைகளாகவே விற்கும் கனவில் இருப்பவர்களை என்ன செய்வது?

பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்தப் பாழாய்ப்போன பொருளாதாரத்தை என்ன செய்வது?

No comments:

Post a Comment