Translate

Sunday, 12 February 2012

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோரும் ஈ.பி.டீ.பி.


 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியும்காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருகின்றது.

 ஈ.பி.டி.பி., ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றாகும். 13ம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.யின்ஊடகப் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்வதேசதேசிய இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்த சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்திற்குமுன்னர், முதலில் 13ம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அவர்வலியுறுத்தியுள்ளார்.

 
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உள்ளடங்களாக 13ம் திருத்தச்சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதுநம்பிக்கை கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம்செயற்படுகின்றது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள இது சந்தர்ப்பமாக அமையும் என அவர்குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தீர்வுத் திட்டத்தைஎட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் யோசனைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment