Translate

Thursday, 2 February 2012

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள புலிகளின் தலைவர்களை காட்டிக் கொடுப்பேன்-கருணா

கொழும்பு: சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கும் உலக மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று ஈழத் தமிழர்களால் துரோகி என்று வர்ணிக்கப்படுபவரும், ராஜபக்சே அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பவரும், அடிக்கடி பெண்களுடன் குடித்து விட்டு பார்ட்டி கொண்டாடுகிறார் என்று சர்ச்சைகளில் சிக்குபவருமான கருணா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் உலக மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். அந்த மாநாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் அம்பலப்படுத்துவேன். அந்த அமைப்பினரும், அதன் தலைவர் பிரபாகரனும் ஏராளமான போர்க்குற்றங்கள் புரிந்துள்ளனர்.

அவர்கள் எந்தெந்த அரசியல் தலைவர்களை கொலை செய்தனர் என்று பட்டியல் என்னிடம் உள்ளது. அதை நான் மாநாட்டில் வெளியிடுவேன். விடுதலைப் புலிகளுக்கு மேற்கத்திய நாடுகள் சில அடைக்கலம் கொடுத்தன. அந்த தலைவர்கள் யார், யார், அவர்கள் எங்கு பதுங்கியுள்ளனர் என்பதும் எனக்கு தெரியும். அவர்களையும் காட்டிக் கொடுப்பேன். 

ஜெனீவா மாநாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் செல்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமாக இருந்தவர்கள் ஆகும். கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல் எரியக்கூடாது. இது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்றார்.

No comments:

Post a Comment