சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழின அழிப்பினை வெளிக் கொண்டு வரும் துண்டுப் பிரசுரங்கள் லண்டனில் நேற்று விநியோகிக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திர தினமான பெப்ருவரி 4ம் திகதி அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்ற விவாதத்தைக் கோரும் இணையத்தள மனுவொன்றில் கையெழுத்திட்டு ஆதரவு தருமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதேவேளை இலங்கை மீது கடும் அழுத்தங்களைக் கொண்டுவர வெளிநாட்டில் உள்ள சக்திகள் முனைவதாக இலங்கை அரசு நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடுங் குளிரையும் பொருட்படுத்தாது லண்டன் மாநகரின் மையத்தில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில், பி.ப 2 மணியளவில் ஒன்று திரண்ட செயற்பாட்டாளர்கள் துண்டுப் பிரசுரங்களை அனைத்து இன மக்களிடம் விநியோகித்தனர் அத்தோடு அனைத்து இன மக்களுக்கு ஈழத் தமிழர்களுக் கெதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழின படுகொலைகள், மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இத் துண்டுப் பிரசுர செயற்பாட்டின் போது செயற்பாட்டாளர்கள் தாங்கியிருந்த பதாதைகள் பல்லின மக்களை பெரிதும் கவர்ந்ததோடு, ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.அத்தோடு உடனடியாக இணையத் தள மனுவில் கையொப்பமிட முன்வருவோரிடம் அவ்விடத்திலேயே மடிக் கணனியில் கையொப்பம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதமான துண்டுப் பிரசுர விநியோக பரப்புரையை இங்கு வாழும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து தம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யுமாறும் இணைய மனுவில் தாமும் துரிதமாக கையெழுத்திட்டு ஏனைய இன மக்களையும் கையெழுத்திட வைக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது. தங்களுக்கு தேயையான துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
எம் உறவுகளின் விடுதலைக்கான பாதை உங்கள் காத்திரமான செயற்ப்பாட்டிலேயே தங்கி உள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை.

No comments:
Post a Comment