Translate

Saturday, 11 February 2012

வடக்கு - கிழக்கு பிரிப்பால் பலம் அடைந்த புலிகள்!

வடக்கு - கிழக்கு பிரிப்பால் பலம் அடைந்த புலிகள்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலப்படுத்தியது என இந்தியா அபிப்பிராயம் கொண்டு இருந்தது.


கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பதில் தூதுவராக இருந்த மாணிக்கம் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவருக்கு இந்நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

வடக்கு – கிழக்கின் இணைப்புக்கு எதிராக இலங்கையின் உயர்நீதிமன்றத்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு பாரதூரமான பின்னடைவு என்று கூறி இருக்கின்றார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு புலிகளை பலப்படுத்தி உள்ளது, ஏனெனில் இலங்கை அரசை நம்ப முடியாது என புலிகள் விளக்கம் கொடுக்க முடியும் என்று விபரித்து இருக்கின்றார்.

அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன

No comments:

Post a Comment