Translate

Saturday, 11 February 2012

மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!

மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் தத்துவ ஆசிரியராக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இருந்து வருகின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து உள்ளது.

-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.இவர் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றமைக்கு அமெரிக்காவில் இருந்து நாட்டுக்கு வந்தார்.
மஹிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனையை உருவாக்குகின்றமைக்கு மஹிந்தருக்கு பேருதவிகள் செய்தார். மஹிந்தரின் தேர்தல் பேச்சுக்களில் அநேகமானவை இவரால் ஆக்கப்பட்டவை.
பிரதமர் பதவி உட்பட முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்கு அமைச்சர்களை நியமிக்கின்றமையில் இவரின் செல்வாக்கு அதிகமாக இருந்து உள்ளது.
மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்டமைக்கு இவரே காரணம்.-
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.

No comments:

Post a Comment