Translate

Saturday, 11 February 2012

ஒரு மாதகாலத்தில் சிறிலங்காப் படைகளை வடக்கில் இருந்து விலக்குவேன் – இந்திய ஊடகர்களுக்கு டக்ளஸ் பம்மாத்து!

Posted Imageவடக்கு மாகாணத்தில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களிடமே, வடக்கில் எஞ்சியுள்ள படையினரை அகற்ற தனக்கு ஒருமாதம் காலஅவகாசம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை பிரிஐ வெளியிட்டுள்ளது.
“வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்தும் சிறிலங்கா இராணுவம் விரைவில் அகற்றப்படும்“ என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
அதேவேளை, “இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறிலங்காவின் எந்தப் பகுதியிலும் கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இல்லை. ஆனாலும் இராணுவ முகாம்கள் உள்ளன.
இராணுவத்தைக் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். விரைவில் குறைக்கப்படும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். ராணுவத்தினரால் இங்கு ஏதாவது இடையூறு நேர்ந்திருந்தால், நீங்கள் என்னை கேளுங்கள். நான் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.saritham.com/?p=50300 

No comments:

Post a Comment