Translate

Thursday, 9 February 2012

கருணாவும் - உள்நாட்டு குற்றவாளிகள் கப்பம் கோரல்களில் ஈடுபடுகின்றனர்: பசில் சொன்னதாக விக்கிலீக்ஸ்


கருணாவும் - உள்நாட்டு குற்றவாளிகள் கப்பம் கோரல்களில் ஈடுபடுகின்றனர்: பசில் சொன்னதாக விக்கிலீக்ஸ் 
சிறிலங்கா அரசின் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா மற்றும் உள்நாட்டுகுற்றவாளி குழுக்கள் ஆகியன கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதியின் சகோதரரும் தற்போதைய பொருளாதார அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருணா தரப்பினர் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி தரப்பினர் ஆகியோரிடம் ஆயுதங்கள் இருக்கலாம் என பசில் ராஜபக்ஷ சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2006ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு வர்த்தகர் ஒருவரை கடத்தியமை தொடர்பாக கருணா தரப்பு ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் கருணா தரப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நீண்ட காலமாக தமிழ் வர்த்தகர்களிடம்கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த கப்பம் கோரல் வர்த்தகத்தைதற்போது கருணா தரப்பினரும், உள்ளுர் குற்றவாளிகளும் பொறுப்பேற்றக் கொண்டுள்ளதாகவும் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டள்ளது.

No comments:

Post a Comment