கண்ணிவெடிகள் எனப்படும் மிதிவெடிகள் ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சோகமாகிவிட்டது. அந்த சோகத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் மிதிவெடி. டேனியல் பாலாஜியும் நீலிமா ராணியும் நடித்துள்ள இந்தப் படத்தின் சிறப்பு, முதல் முறையாக இணையதளத்திலேயே வெளியாவதுதான்.
மிஸ்டிக் பிலிம்ஸ், ஆஸ்ரேலியா சார்பில் அங்கு வாழும் தமிழர், ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ், தயாரித்து இயக்கி உள்ளார்.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் www.mithivedi.com.auஎன்ற தளத்தில் பணம் செலுத்தி இந்தப் படத்தைப் பார்க்கலாம். டிஜிட்டல் சினிமா என்ற ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை இணையத்தில் வெளியிடுகின்றனர்.
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் கண்ணிவெடிகளால் எப்படி பாதித்துக்கொண்டிருக்கின்றனர், என்பதை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு ஈழத்து இளம் பெண் கைகுழந்தையுடன் கண்ணிவெடி நிறைந்த இடத்தில் வந்து மாட்டிக்கொள்கிறாள். அவளை இலங்கை இராணுவ அதிகாரி, விடுதலைப்புலி உறுப்பினர் என்று சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கின்றான். அந்த ஈழத்து பெண் கண்ணிவெடி நிலத்திலிருந்தும், அந்த இராணுவ அதிகாரியிடம் இருந்தும் எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதை. இதில் இராணுவ அதிகாரியாக டேனியல் பாலாஜியும், ஈழத்து பெண்ணாக நீலீமா ராணியும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment