இலங்கைக்கு வரும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கைகு சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி கொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் மற்றொரு வெளிநாட்டு சுற்றுலா பயணி மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்ட்டது அதன் பின்னரே பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சிக்கும் சுற்றுலா பயணிகளின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் ரூமி ஜொபார் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து போனதற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.
'பிரித்தானியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதும், இந்தியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment