
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ராஜதந்திர வரப்பிரசாதம் தொடர்பில் சவால் விடுக்க முடியாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை அரசியலமைப்பின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது.
எனவே, அதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராஜதந்திர வரப்பிரசாதம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்களை அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்க முடியாது என விடுதலைப்புலி ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் இராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் இராஜதந்திர வரப்பிரசாத கொள்கை தொடர்பில் அந்தநாட்டு காங்கிரஸ் சபை கூட கேள்வி எழுப்பியதில்லை என இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, மேன்முறையீடு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ka.
No comments:
Post a Comment