சிறீலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் இன்று ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை இணைக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

காரணம் பரிந்துரைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் சற்று நேரத்திற்கு முன்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சுதந்திரமானதும் வெளிப்படையானதும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் 20 வருட யுத்தம் தொடர்பில் தனிநபர்களின் கருத்துகளைக் கேட்டு ஐநா நிபுணர், குழு அறிக்கை தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள், மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகள் விடுதலை, கண்ணிவெடி அகற்றல், காணிப் பிரச்சினை உள்ளிட்டவற்றை தீர்க்கும் திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கிவிட்டது.

எனவே இவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இலங்கைக்குத் தேவை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.