Translate

Wednesday, 21 March 2012

கனடிய தமிழர் தேசிய அவையின் மே18 இனபடுகொலை நினைவுநாள் அறிவிப்பு


கனடிய தமிழர் தேசிய அவையின் மே18 இனபடுகொலை நினைவுநாள் அறிவிப்பு


தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள்ஆகின்றனஇவ் இன அழிப்பை நினைவு கூரும் முகமாக
கனடாவில் வரும் மே மாதம் கனடிய தமிழர் தேசிய அவையினரால்பல நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய நிகழ்வாக மே 18 ஆம் திகதியில் இனபடுகொலைநினைவுநாள் அல்பெர்ட் கம்பெல் சதுக்கம் ( Albert Campbell Square - Scarborough Town Center ) ல் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

மற்றும் இரத்ததான நிகழ்வு மே 26 ஆம் திகதியில் இடம்பெறும்.இக்காலங்களில் வேறு நிகழ்வுகளை எம்முடன் இணைந்துஒழுங்கமைக்க விரும்பும் அமைப்பின் பிரதிநிதிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறுகேட்கப்படுகின்றீர்கள்.
இக்காலகட்டமானது இன அழிப்பை நினைவுகூரும் காலமாக மட்டுமல்லாமல் எமது இனவிடுதலைக்கான முன்னெடுப்புக்கான பல வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக அமையவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
இக்காலகட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாகதவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்கப்படுகின்றீர்கள்.
உலகம் முழுவதும் இடம் பெறும் இன்நிகழ்வுகள் மாண்டுபோனஉரிமையை இழந்த எம்மின மக்களின்ஒன்றுபட்ட விடுதலையின் குரலாய் ஒலிக்கட்டும்.
இன் நிகழ்வுகளில் சகல தமிழ் மக்களையும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு எம்மினவிடுதலைக்கு உரமூட்டுமாறு வேண்டுகின்றோம்.
தொடர்புகளுக்குகனடிய தமிழர் தேசிய அவை
மின்னஞ்சல்info@ncctcanada.ca
இணையத்தளம்ww.ncctcanada.c
a

No comments:

Post a Comment