Translate

Thursday, 29 March 2012

இலங்கை போரில் 40000 பொது மக்களை கொன்று இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ள முடியும்!- மலேசியா!


இலங்கை போரில் 40000 பொது மக்களை கொன்று இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ள முடியும்!- மலேசியா!

ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறியதுபோல் இலங்கை யுத்தத்தில் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ள முடியும் எனவும் யுத்தத்தில் இரு தரப்பினரும் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதெனவும் மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு வாக்களிக்காமல் தவிர்த்தமைக்கான காரணத்தை மலேசியா இன்று விவரித்துள்ளது.
இலங்கை தனது பிரச்சினையை தீர்த்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சிறிது என்பதால் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சாட் ரொய்ட் தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தம் நிறைவடைந்து மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டு அதனை பாராளுமன்றில் சமர்பித்து 3 மாதத்திற்குள் செயற்படுத்த இலங்கைக்கு காலம் போதாது என மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மாதங்களில் ஆணைக்குழு பரிந்துரை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என ஐநாவில் கொண்டுவந்த பிரேரணை நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நல்லிணக்கம் என்ற விடயம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என்பதை மலேசியா அறிந்துள்ளதென அவர் கூறியுள்ளார்.
எனினும் தனது நாட்டு நல்லிணக்கம் மற்றும் சமரசம் குறித்து சர்வதேசத்திடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள இலங்கை நடவடிக்கை எடுத்ததாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறியதுபோல் இலங்கை யுத்தத்தில் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ள முடியும் எனவும் யுத்தத்தில் இரு தரப்பினரும் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதென மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இதே விடயத்தை இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமை இரட்டை வேடம் அல்ல எனவும் மற்றுமொரு நாட்டின் உள்விடயத்தில் தலையிட அது விரும்பவில்லை எனவும் மலேசியா பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சட் ரொய்ட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment