Translate

Wednesday, 28 March 2012

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி யாழ்.மாநகர சபை நேற்றுத் தீர்மானம்


பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி யாழ்.மாநகர சபை நேற்றுத் தீர்மானம்
news
 நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்தி யாழ்.மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இலங்கை அரசு தானாகவே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபை ஆலோசனை வழங்கியுள்ளது. 

சர்வதேச அனுசரணையை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் கோருகிறோம் எனத் தெரிவிக்கும் தீர்மானம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. ஆதரவாகப் 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைத்தன.
யாழ்.மாநகர சபையின் மாசி மாதத்திற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது .  கூட்டத்தில் தீர்மானத்துக்கான வரைபை உறுப்பினர் கிளபோடாசிஸ் பிரேரித்தார் மாநகர சபையின் ஆளும் கட்சி எதிரணி உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்த மக்களுக்கு இந்த நாட்டைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கும். சில முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாட்டை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான நாடான அமெரிக்காவின் தீர்மா னத்தை நாங்கள் கண்டிக்கி றோம் என எம்.ரமீஸ் தெரிவித்தார்.
கூட்டமைப்பு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பேசுகையில் நல்லிணக்கத்திற்கு தடையாக இங்கே பேரினவாதம் தான் இருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு எம்மை அடக்குகிறார்கள். எமக்கான உரிமைகள் வழங் கப்பட வேண்டும். கல்வி மொழி உட்பட அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்க ளுக்கான உரிமைகள் வழங்கபட வேண்டும். கல்வி மொழி உட்பட அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறை வேற்ற அரசு முன்வரவில்லை.
இங்கே இன்னமும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதுள்ளனர். இராணுவம் எல்லா இடங்களையும் ஆக்கிரமித் துள்ளது. அனாவசியமாக புத்தர் சிலைகள் வைக்கப் பட்டு வருகின்றன. நல்லிணக் கம் எப்படி வரும்?. அதற்கு அரசு தயாராக இல்லை. என்றார்.
மாநகர சபை உறுப்பினர் மு.றெமீடியஸ், அ.பரஞ்சோதி, எஸ்.விஜயகாந், முஸ்தபா உட்படப் பலர் தீர்மானத்துக்கு எதிராகவும் ஆதர வாகவும் உரையாற்றினார்கள்.
முன்னாதாகச் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரணை தொடர்பாக எதிரணியினர் தமது கருத்துகளைக் கூற முற்பட்டபோது கூட்டத்தை அரைமணி நேரம் ஒத்தி வைத்து வெளியேறப்போவ தாகக் கூறிய யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யேகேஸ்வரி பற்குணராஜா சபையை விட்டு வெளி யேறித் தனது அலுவலகத் துக்குச் சென்றார். ஆளும் கட்சி உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளி யேறிச் சென்றனர். எனினும் எதிரணியினர் தாங்கள் வெளி யேறப் போவதில்லை எனக் கூறித் தமது இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்தின் பின் சபைக்கு வந்த முதல்வர் விவாதத்துக்கு அனுமதியளித்ததை அடுத்துக் கூட்டம் நடைபெற்றது. 

No comments:

Post a Comment