Translate

Wednesday 28 March 2012

பிரித்தானியாவில் 50 ஆயிரம் மாணவர்களைக் காணவில்லை !


பிரித்தானியாவில் 50 ஆயிரம் மாணவர்களைக் காணவில்லை !
பிரித்தானியாவில் சுமார் 50,000 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து பிரித்தானியாவில் கல்விகற்றுவந்த மாணவர்களுக்கு அந் நாட்டில் வேலைசெய்ய முடியாது என சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. புதிதாகக் கொண்டுவரப்பட்ட இச் சட்டத்திருத்தத்தால் பல மாணவர்கள் பிரித்தானியாவில் அல்லலுறும் நிலை தோன்றியது.

 இதனை அடுத்து அவர்கள் ஐரோப்பாவில் உள பல நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். வேறு சில மாணவர்கள் கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இந் நிலையிலேயே வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 50 ஆயிரம்பேரைக் காணவில்லை என எல்லை முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில், பிரித்தானியாவுக்கு கல்விகற்க்க வரும் மாணவர்கள், வாரத்திற்கு 10 மணத்தியாலங்கள் வேலைசெய்யலாம் எனவும் பின்னர் அது 20 மணத்தியாலங்களாகவும் உயர்த்தப்பட்டாது. ஆனால் தற்போது அது முற்றாக நீக்கப்பட்டு, மாணவர்களாக வரும் எவரும் வேலைசெய்யமுடியாது என பிரித்தானிய முகவர் நிலையம் அறிவித்தது. இதனை அடுத்தே மாணவர்கள் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆயிரம் மாணவர்கள் பிரித்தானியாவில் ஒளிந்து அல்லது மறைவாக இருந்து வேலைசெய்துவருவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment