இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை அடிப் படையாகக் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்தியா முடிபெடுக்கும் என்றும் இந் திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாட்டை விலக்க வலியுறுத்தி தமிழக எம்.பிக் கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளுமன்றில் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரினால், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு அடங்கிய அறிக்கையொன்று நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அவரால் உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது அங்கு உரையாற்றிய கிருஷ்ணா,மேலும் கூறியதாவது, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து, இந்தியா இன்னும் முடி பெடுக்கவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு இருக்கின் றது. அந்த நட்புறவில் விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் இந்தியா தனது முடிபை எடுக்கும்.
இலங்கை அரசாங்கத்துடனான எமது ஆக்கபூர்வமான உறவு மற்றும் எமது உதவித்திட்டங்கள் காரணமாகவே அங்கு தமிழ்ப் பிரதேசங்களில் வழமை நிலைமைக்குத் திரும்பியுள்ளது. அவசர காலச் சட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடந்துள்ள பின்னணியில் பல வகையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாம் எதைச் செய்தோம், அது தமிழ் மக்களின் நலன்களையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி, மீள்கட்டுமானம் என்பனவற்றையும் கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றது. இலங்கை, குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மனித உரிமைகள் வேலைத்திட்டத் தின் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப் படுவதை கண்காணிக்கவென அமைச்சரவை உப குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு மீண்டும் தொழிற்படத் தொடங்கியுள்ளது அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழு கூறியபடி மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென இலங்கை பாதுகாப்புத்துறை விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளது. தமிழ்ச் சமுதாயத்தின் மனத் தாக்கங்களை தீர்க்கும் வகையில் உண்மையான நல்லிணக்க செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடு க்கப்படுவதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலிருந்தும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாம் இந்த விஜயத்தை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. நாடாளுமன்றில் வெளிப்படுத்திய இந்த உணர்வினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று உறுதியளிக்கின்றேன். ஐ.நா.மனித உரிமை தீர்மானம் குறித்து இறுதி முடிபு எடுக்கும்போது, அது பற்றி நாடாளுமன்றில் தெரிவிக்கப்படும்.
இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகின்றது. இலங்கைத் தமிழர் களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அதை இலங்கை தான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அது குறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்று ரீதியான உறவு, நட்பு உள் ளது. அது பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல இலங்கையில் நடந்துவரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. பிரச்சினைகள் மேலும் பெரிதாகிவிடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்துவிடக் கூடாது என்றார் கிருஸ்ணா.

No comments:
Post a Comment