Translate

Sunday 25 March 2012

ஏ தமிழ்ச் சமுதாயமே நீங்கள் யார் பக்கம்?-சுப.உதயகுமார்.

நீங்கள் யார் பக்கம்?-சுப.உதயகுமார்.

ஏ  தமிழ்ச் சமுதாயமே உண்கண்முன்னால் உன்சந்ததியின் எதிர்காலத்திற்காக போராடும் ஒரு உண்மைத் தமிழனும் அவனைச் சுற்றி ஒரே ஒரு சிறு பகுதி  மக்களும் மாத்திரம் தன்னந்  தனியாக அநாதரவாக நிற்கிறார்கள்.  ஒரு  ஜில்லாவிலிருந்து  ஒரு மாநிலத்திலிருந்து ஏன்  ஒரு நாட்டிலிருந்தே  ஒரே ஒரு ஊர் மாத்திரம் எதோ ஒரு எதிரி நாடுபோல நீ உன் நாடென்று நினைக்கும் இந்திய நாட்டால்  இன்று தனியாகப் பிரிக்கப் படுகிறது.  
நாளை இதே இழிநிலை உங்களுக்கும் 
ஏன் ஒவ்வொரு தமிழனுக்கும் வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்.    ஆகவே நாளைய உங்கள்  சந்ததியைக்காக்க  இன்றே குரல்கொடுக்க தமிழர்களே ஏன் தயக்கம்.  உலகமயம் என்கிற மாயையில் ஒவ்வொரு மனிதனும் அவனது இனத்திலிருந்து பிரிக்கப் பட்டு உதிரிகளாக்கத் தனிமைப் படுத்தப் படுகிறான் என்பதே உண்மை.  இன்றைய இந்த உலகில் முதாளித்துவம் தனிமனிதனை அடிப்படை வாழ்வுரிமை படைத்த  மனிதனாகப் பார்க்கவில்லை. பணம் சம்பாதிக்க உதவும் ஒரு விலங்காகப் பார்க்கிறது.  மக்களுக்காக அரசு என்கிற நிலைமாறி அரசு என்கிற உயிரற்ற்ற  ஒரு மாயை இயங்க மக்கள் என்கிற நிலைமையை  முதலாளிகள் உருவாக்கி உள்ளனர்.  ஏழைகளின் உதிரத்தை உறிஞ்சி  மேலும் மேலும் செழிக்க முதலாளிகள் செய்யும் சதியை தமிழ் இனமே ஏன் இன்னும் உணர மறுக்கிறாய்.  
 அந்நியநாட்டு முதலாளிகளின் கைக்கூலிகளாக மாறி  சொந்த நாட்டு மக்களையே  படுகொலை செய்து ஒடுக்க நினைக்கும் இந்திய பாசிசப் பார்ப்பனிய அரசு ஒருபோதும் தமிழ் இனத்தை நிம்மதியாக வாழ விடாது.
 
இடிந்தகரையில் நடக்கிற போராட்டமானது அந்த மக்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கான போராட்டம் என்பதை உணர்ந்து தமிழர்களே நாம் போராடுவோம்.  இடிந்தகரையில் போராடும் மக்களுடன் கரம் கோர்ப்போம்! போராட்த்தை வலிமைப் படுத்துவோம்!!!

No comments:

Post a Comment