Translate

Thursday 29 March 2012

வெளிநாட்டு உல்லாச பயணிகளின் கமராவில் சிக்கிய நல்லூர் முருகன் ஆலயம்!


இதில் அழுத்தி படங்களை பாருங்கள் ! யாழ்ப்பாணத்தின் அடையாளமாக உள்நாட்டவர்களால் மட்டும் அன்றி வெளிநாட்டவர்களாலும் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் கண்டு கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நிச்சயம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு வருகை தந்தே ஆவார்கள்.


யாழ்ப்பாணத்தின் மிக முதன்மையான ஆலயமாக இதனை சொல்கின்றார்கள். யாழ்ப்பாணத்தின் மிக பிரமாண்டமான ஆலயங்களில் ஒன்று.

100 அடி உயரத்தில் ஆன தங்க கோபுரம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படுகின்றது.

ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் பூசைகள் கிரமமாக இடம்பெற்று வருகின்றன.

நல்லூர் கந்தன் ஆலயம் முதலில் 1400 களில் கட்டப்பட்டது. ஆனால் போர்த்துக்கேயர் ஆலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். தற்போதைய ஆலயம் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அன்று முதல் யாழ்ப்பாண மக்களின் இந்து சமய ஆசார வாழ்க்கையின் நடுநாயகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கி வருகின்றது.

ஒவ்வோர் வருடமும் ஓகஸ்ட் மாதம் இங்கு 25 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன. மிகப் பெரிய உற்சவம் தேர் திரு விழா ஆகும்.

யாழ்ப்பாணத்தை அண்மைய காலங்களில் சுற்றிப் பார்த்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் இருவர் நல்லூர் முருகன் ஆலயத்தின் பெருமைகளை பயண கட்டுரை ஒன்றில் எழுதி உள்ளனர்.

அத்துடன் ஆலயத்தை கமராவில் பலவாறு படங்கள் பிடித்து இருக்கின்றார்கள்.

இப்படங்களை வாசகர்களின் பார்வைக்காக செய்தியுடன் இணைத்து உள்ளோம்.

No comments:

Post a Comment