இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது ஏராளமான அப்பாவி தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கை ராணுவத்தினரால் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
அதற்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, ரஷ்யா உட்பட 15 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்நிலையில் தலைநகர் கொழும்பில் லங்கா எக்ஸ்போ 2012 வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி ராஜபக்சே நேற்று திறந்து வைத்து பேசியதாவது, கடந்த 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த தீவிரவாத செயற்களுக்கு முடிவு கட்டியுள்ளோம்.
தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்கவிட மாட்டோம். ஆனால் சில வெளிநாடுகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றன. இந்த கண்காட்சி்ககு வெளிநாட்டவர்கள் வந்துள்ளதில் இருந்தே போலி பிரசாரம் எடுபடாது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் வெளிநாடுகளில் ராஜபக்சே இந்தியாவையும் குறிப்பிடுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. |
No comments:
Post a Comment