Translate

Thursday 29 March 2012

அமெரிக்காவால் கடுமையான உத்தரவுகள்! திண்டாடுகிறது இலங்கை!!


இலங்கையில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான உத்தரவுகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது.


இது தொடர்பில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது-

“உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அதற்கு உதவ அனைத்துலக சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது“ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment