Translate

Thursday, 22 March 2012

ஜெனிவாவில் இலங்கை தோல்வியை யாழ்.மக்கள் வெடி கொழுத்திக் கொண்டாடினர்!


ஜெனிவாவில் இலங்கை தோல்வியை யாழ்.மக்கள் வெடி கொழுத்திக் கொண்டாடினர்!
ஜெனிவாலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.நகரப் பகுதியில் இந்த மகிழ்ச்சியான செய்தியை ஊடகங்கள் வாயிலாக கேட்டதும் மக்கள் இனிப்பு பண்டங்களை மற்றவர்களுடன் பகிந்து கொண்டாடினர்.

யாழின் கரையோரப் பகுதிகளில் பட்டசுகள் சில சில இடங்களில் வெடித்துள்ளது. இதேவேளை யாழ்.பல்கலைக்கழககத்தில் ஜெனிவாவில் இலங்கை தோற்றடிக்கப்பட்ட செய்தி குடாநாடு எங்கும் பரவியதும் மாணவர்கள் பட்டசுகளைக் கொழுத்தி அரவரித்துள்ளனர்

இதேவேளை யாழ்.நகர வீதிகளில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது

இருந்தும் இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment