கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து ஜெனீவாவிற்கு விஜயம் செய்த தமிழ் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமர்வுகளில் பங்கேற்ற இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் கடமையாற்றிய தமிழ் வைத்தியர் மற்றும் புலி எதிர்ப்பு தமிழர்களுக்கு உரிய முறையில் புலி ஆதரவாளர்களுக்கு தமது எதிர்ப்பை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இது தொடர்பில், ஜனாதிபதியிடம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் முறைப்பாடு செய்வார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பிரதிநிதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் அமர்வுகளின் பின்னணியில் இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட சகல விடயங்களும் உள்ளடக்கிய இரகசிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment